தாலிபான்களிடம் சிக்கி... மறுபிறவி எடுத்து வந்த செய்தியாளர்!.. ஒரே ஒரு ட்வீட்டால்... கதிகலங்கிப் போன செய்தி நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான்காளல் தாக்கப்பட்ட செய்தியாளர் பலியானதாக சொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது.

TOLO NEWS நிருபர் Ziar Yaad மற்றும் அவரது ஒளிப்பதிவாளருடன் காபூலில் உள்ள ஹாஜி யாகூப் சந்திப்பில் வறுமை, வேலையின்மை குறித்து செய்தி சேகரித்துள்ளனர்.

அப்போது Ziar Yaad மற்றும் அவரது ஒளிப்பதிவாளரையும் சரமாரியாக தாக்கிய தாலிபான்கள், அவர்களிடமிருந்து கேமரா, உபகரணங்கள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். Ziar Yaad மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

அதைடுத்து, Ziar Yaad-ஐ தாக்கிய நபர்களைத் தேடி வருவதாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், தாலிபான்களால் தாக்கப்பட்ட நிருபர் Ziar Yaad உயிரிழந்துவிட்டதாக TOLO NEWS செய்தி வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து, தான் மரணமடைந்ததாக பரவிய செய்தி பொய் என Ziar Yaad தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், காபூலில் செய்தி சேகரிக்கும் போது தாலிபான்களால் நான் தாக்கப்பட்டேன். கேமராக்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் எனது தனிப்பட்ட மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சிலர் நான் மரணமடைந்துவிட்டதாக பொய்யாக செய்தி பரப்பி உள்ளனர்" என தெளிவுப்படுத்தியுள்ளார்.

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்