6 வருஷமா கழுத்தில் சிக்கிய டயருடன் போராடிய முதலை.. மீட்பவருக்கு சன்மானம் அறிவிப்பு..
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனிஷியா நாட்டில் உள்ள பலூ நகரத்தில் இருக்கும் நீர்நிலையில் கடந்த ஆறு வருட காலமாக கழுத்தில் சிக்கிய டயருடன் அவதிப்பட்டுவந்த முதலையை மூன்று வார கடின முயற்சிக்குப் பிறகு மீட்டிருக்கிறார் உள்ளூர் நபர் ஒருவர். முதலையை மீட்பவருக்கு சன்மானமும் அளிக்கப்படும் என அந்த நகர நிர்வாகம் முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"புர்கா என்னோட உரிமை" கூச்சலுக்கு நடுவே..தனியாக ஓங்கி ஒலித்த உரிமைக்குரல்.. - வைரலாகும் வீடியோ..!
கழுத்தில் சிக்கிய டயர்
பலூ நகரத்தில் உள்ள ஆற்றில் இருந்த முதலை ஒன்று இருசக்கர வாகனத்தின் டயர் கழுத்தில் சிக்கி அவதிப்பட்டு வந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் பலரும் முதலையை காப்பாற்ற வேண்டும் என அந்த நகர நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். சுமார் 13 அடி நீளமுள்ள அந்த முதலையின் கழுத்தில் டயர் சிக்கியிருப்பது அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும் என சமூக ஆர்வலர்கள் பலரும் அச்சம் தெரிவித்திருந்தனர். இதனால், டயரில் சிக்கிக்கொண்ட முதலையை மீட்பவருக்கு சன்மானம் அளிக்கப்படும் என நகர நிர்வாகம் அறிவித்தது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் முதலையை மீட்கப் போராடி தோல்வியடையவே, உள்ளூர் வாசியான டிலி என்பவர் இந்த ஆபத்தான முயற்சியில் இறங்கினார்.
தோல்வியில் முடிந்த மீட்புப்பணி
முதல் முயற்சியிலேயே டிலி முதலையை தனியாளாக பிடித்து, டயரை விடுவிக்க முயற்சித்திருக்கிறார். அப்போது அவர் உதவிக்கு அக்கம் பக்கத்தினரை அழைத்திருக்கிறார். இருப்பினும், முதலை மீதுள்ள அச்சம் காரணமாக யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
3 வார காத்திருப்பு
இதனையடுத்து முதலையைப் பிடிக்க பிரத்யேக பொறி ஒன்றினை அமைத்து 3 வாரங்களாக காத்திருந்திருக்கிறார் டிலி. பொறியில் கோழி மற்றும் வாத்தை உபயோகித்து நம்பிக்கையுடன் காத்திருந்தவர் இறுதியாக முதலையைப் பிடித்திருக்கிறார். கடும் முயற்சிக்குப் பிறகு முதலையின் கழுத்தில் இருந்த டயரை வெற்றிகரமாக அகற்றி சாதித்திருக்கிறார் விலங்குகள் ஆர்வலரான டிலி.
கடமை
கடந்த 2020 ஆம் ஆண்டு முதலையை டயரில் இருந்து விடுவிப்பவருக்கு சன்மானம் அளிக்கப்படும் என நகர நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் தான் சன்மானத்திற்காக இதைச் செய்யவில்லை என்கிறார் இவர். இதுகுறித்து டிலி பேசுகையில்," நான் முதலையை பிடிக்கப்போகிறேன் எனச் சொன்னபோது ஒருவர்கூட அதனை நம்பவில்லை. மேலும், என்னை கிண்டல் செய்தனர். இறுதியில் நான் முதலையை விடுவித்த புகைப்படத்தைக் கண்டதும் அவர்கள் பேச்சின்றி நின்றதைப் பார்க்க பெருமையாக இருந்தது. சன்மானத்திற்காக இதனை நான் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரையில் விலங்குகள் துன்புறுவதை தடுக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. பாம்புகளுக்கு ஏதும் தீங்கு இழைக்கப்பட்டாலும் நான் அதற்கு எதிராக குரல் கொடுப்பேன்" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: இங்க ‘முதலை’ கெடக்குன்னு சொல்லுவாங்க.. ஆனா இப்போதான் நேர்ல பாக்கோம்.. தீயாய் பரவும் வீடியோ..!
- அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுத்த நாடு..!
- VIDEO: வெள்ளத்துல 'முதலை' வந்துச்சுன்னு பரவியது உண்மையா...? 'தீயாக பரவிய ஃபோட்டோ மற்றும் வீடியோ...' - 'விளக்கம்' அளித்த மாவட்ட ஆட்சியர்...!
- 'சோறு' பொங்குறதுல என் 'பொண்டாட்டிய' அடிச்சுக்க ஆளே இல்ல...! யோவ், 'அடுப்பு' பக்கம் இருக்குறப்போ கிட்ட போயிடாதயா...! - என்னடா 'இப்படி' கெளம்பிட்டீங்க...?
- 'அந்த பொண்ணு இறந்து 7,200 வருஷம் ஆச்சு'... 'ஆனா இது மட்டும் எப்படி அழியாம இருக்கு'... 'பதறிப்போன ஆராய்ச்சியாளர்கள்'... ஒரு வேளை அமானுஷ்யமா?
- கடலுக்கடியில் 'பயங்கர' நிலநடுக்கம்...! சுனாமி வர சான்ஸ் இருக்கா...? - பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் இந்தோனேசிய மக்கள்...!
- VIDEO: 'எல்லாரும் கண்ண மூடி பிரேயர் பண்ணிட்டு இருந்தப்போ...' 'சைலன்டா உள்ள வந்துருக்கு...' 'விட்டா போதும் என தெறிச்சு ஓடிய பொதுமக்கள்...' - கூலாக பாஸ்டர் செய்த காரியம்...!
- செம போர் அடிக்குது...! 'எவ்ளோ நாள் தான் தண்ணியிலயே கிடக்குறது...' நமக்கும் 'லைஃப்ல' ஒரு 'சேஞ்ச்' வேணும் இல்லையா...! - வைரல் வீடியோ...!
- 'எல்லாம் நல்லா தானே போகுதுன்னு நெனச்சோம்'... 'இடியாய் வந்த செய்தி'... 3 மாதத்திற்கு பிறகு தவித்து நிற்கும் நாடு!
- ‘நல்லவேளை காலையிலேயே பாத்துட்டோம்’!.. இது ‘டூரிஸ்ட்’ அதிகமாக குளிக்கிற இடம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!