உங்களுக்கு கொரோனா இருக்கா? 15 நாள்கள் இந்த 'பாக்ஸ்'க்கு உள்ளேயே இருக்கணும்.. சீனா கொண்டு வந்துள்ள அதிரடி சட்டம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனா: சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை இரும்பு பெட்டிக்குள் பூட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 2022-ஆம் ஆண்டு ஆகியும் இன்னும் பரவல் குறைந்த பாடில்லை. ஒவ்வொரு வருடம் கொரோனா வைரஸின் அதிகமாகி மக்களின் அன்றாட வாழ்க்கையையும், உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது.
கொரோனா தொற்று இல்லை:
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவில் முதலில் வைரஸின் தொற்று அதிகமாக காணப்பட்டாலும் அந்நாட்டு அரசின் கடும் கட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தது. ஒரு கட்டத்தில் சீனா தங்கள் நாட்டில் கொரோனா தொற்றே இல்லை என்று கூட அறிவித்தது.
சீன மக்களுக்கு நெருக்கடி:
சீனாவில் எல்லைகளை மூடுவது, பரவலாக கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, ஊரடங்கு மாதிரியான நடைமுறைகள் ஆரம்ப நாட்களில் சீன அரசுக்கு பலன் கொடுத்திருந்தாலும் தற்போது அங்கு நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், மக்களை சீன அரசு நெருக்கடிகளுக்கு தள்ளிவருவதாகவும் செய்தி வெளியாகி வருக்கிறது. அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா முகாம்களில் தங்க வைப்பு:
தற்போது வெளியாகியுள்ள செய்திகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் என எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 15 நாட்கள் வரை வலுக்கட்டாயமாக இரும்பு பெட்டிக்குள் தங்கவைக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
இதுவரை 20 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட மக்களை உணவு வாங்கக்கூட அவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். அங்குள்ள Anyang, Xi’an பகுதியில் கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் அங்கு தொடங்க சில வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அரசுக்கு பெரிய தலைவலியாக இது அமைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 5 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் - கடைசி நேரத்தில் போட்டியை ஒத்திவைத்த வெஸ்ட் இண்டீஸ்..!
- பொங்கல் முடிஞ்சதும் தொடர் லாக்டவுனா?.. நீண்ட நாள் கேள்விக்கு அமைச்சர் பரபரப்பு விளக்கம்!
- எங்க உறவுல 'மூணாவது நாடு' வந்து தலையிடுற வேலை வச்சுக்காதீங்க.. சீனா காட்டம்
- BCCI போட்ட பிளான் B - இந்த IPL சீரிஸ் முழுவதும் அங்க மட்டும்தான் நடக்கும் போலயே?
- ‘ரெடியாக இருங்கள்’.. மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ‘முக்கிய’ கடிதம்..!
- 'கடனை தவணையில கட்றோமே...'- சீனாவிடம் கோரிக்கை வைக்கும் இலங்கை..!
- 'ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!'.. தமிழக அரசு அறிவிப்பு! ஆனா.. மாடுபிடி வீரர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்!..
- 2022 ஆரம்பமே இப்படியா..! டெல்டா-ஒமைக்ரான் கலவையாக உருவான ‘புதிய’ வைரஸ்?.. எந்த நாட்டுல தெரியுமா..?
- ஒமைக்ரானை தொடர்ந்து ‘அடுத்து’ ஒன்னு வரும்.. அது இன்னும் ‘கடுமையா’ இருக்கும்.. இந்திய வம்சாவளி விஞ்ஞானி தகவல்..!
- ஐயோ, அது வதந்தி எல்லாம் இல்லங்க.. சாட்டிலைட் புகைப்படத்தில் தெரிய வந்துள்ள உண்மை..