'உலகின் முதல் ஆளாக எய்ட்ஸை வென்ற நபர்'... 'ஆனா இப்படி ஒரு துயரமா'?... கண்ணீருடன் மனைவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகத்தின் முதல் ஆளாக எய்ட்ஸ் நோயை வென்றவர் குறித்து அவரது மனைவி வெளியிட்டுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் திமோதி ரே பிரவுன். இவர் கடந்த 1995ம் ஆண்டு ஜேர்ம பெர்லின் நகரில் வசித்தபோது இவருக்கு எய்ட்ஸ் நோய்ப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமோதி, அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு மருந்துகளை உட்கொண்டு வந்தார். அந்த நேரம் கடந்த 2007ம் ஆண்டில் அவருக்கு 'அக்யூட் மைலைட் லுகீமிய' என்னும் ரத்த புற்று நோய்க்கு ஆளானார். சோதனைக்கு மேல் சோதனைகளை திமோதி சந்தித்தார்.

இதனிடையே அந்த நோய்ப் பாதிப்பிற்கான சிகிச்சை என்பது, அவரது உடலின் ரத்த புற்று நோய் செல்களின் உற்பத்திக்குக் காரணமாக இருக்கும் பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையை நீக்கிவிட்டு, புதிய எலும்பு  மஜ்ஜையைப் பொருத்துவது ஆகும். எனவே அதைத் தானமாகக் கொடுக்கும் கொடையாளர் குறித்துத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில், சரியான கொடையாளர் ஒருவரும் கிடைக்க திமோதிக்கு எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது தான் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

திமோதிக்கு தானம் செய்தவரின் டிஎன்ஏவில் ஒரு அபூர்வமான இயற்கை மாற்றம்(மியூட்டேசன்) காணப்பட்டது. அதன்படி எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்.ஐ.வி வைரஸ் உடலுக்குள் புகுவதற்கு அது தடையினை ஏற்படுத்தியது. இதனால் எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சை முடிந்த நிலையில் திமோதியின் உடலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆச்சரியப்படும் விதமாக, எச்.ஐ.வி வைரஸ் மிகக் குறைந்த அளவிற்குச் சென்று ஒரு கட்டத்தில் முழுவதுமாக நீங்கி விட்டது.

இதனால் திமோதி எய்ட்ஸ் நோய்ப் பாதிப்பிலிருந்து குணமான உலகின் முதல் நோயாளி என அறியப்பட்டார். இது பலருக்கும் நம்பிக்கையையும், ஆச்சரியத்தையும் அளித்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பெரும் சோதனைக்கு ஆளானார் திமோதி. அதாவது மீண்டும் அவரை 'அக்யூட் மைலைட் லுகீமிய' வகை புற்று நோய் தாக்கியது. அது மூளை மற்றும் முதுகுத் தண்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த முறை திமோதிக்கு எந்த அதிசயமும் கைகொடுக்கவில்லை. இதனால் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். எப்படியாவது எனது கணவரைக் காப்பாற்றி விடலாம் என நம்பிக்கை இருந்த நிலையில், அவர் இறந்து விட்டார் என அவரது மனைவி கடும் சோகத்துடன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்