"நான் 2090-ல இருந்து வந்த Time Traveller பேசுறேன்.." அடுத்த சில நாட்களில் நிகழ போகும் பேரழிவு??.. பகீர் கிளப்பிய பேஸ்புக் பதிவு.. உண்மை என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

Time Travel என்பது நிகழ் காலத்தில் இருந்து, எதிர் காலத்திற்கும், வருங்காலத்திற்கும் பயணம் மேற்கொள்வது போன்றதாகும்.

Advertising
>
Advertising

இது தொடர்பாக, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இன்னும் நிரூபணம் ஆகவில்லை.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான், பேஸ்புக்கில் "Time Traveller" என குறிப்பிட்டு பெண் ஒருவர் சொன்ன விஷயம், உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Kim Windell Necos என்ற பெண் ஒருவர், பேஸ்புக்கில் டைம் டிராவல் தொடர்பான க்ரூப் ஒன்றில், அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள கருத்துக்களின் படி, "அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை. நான் 2090 ஆம் ஆண்டில் இருந்து வந்துள்ள ஒரு டைம் டிராவலர். ஆகஸ்ட் 14, 2022 என்ற தேதியில், வரலாற்றின் மிக மோசமான சூறாவளி, தென் கரோலினா பகுதியை தாக்கும். மணிக்கு 250 மைல் வேகத்தில், மொத்தம் 6 சூறாவளி காற்றுகள் வீசும். இதன் காரணமாக, பில்லியன் கணக்கிலான மக்கள் பாதிப்பு அடைவார்கள். ஏராளமானோரும் உயிரிழக்கக் கூடும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்ற எச்சரிக்கை ஒன்றை Kim என்ற பேஸ்புக் பயனாளி குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 30,000 பேர் வரை உள்ள Time Travel பேஸ்புக் க்ரூப் ஒன்றில், அந்த பெண் பகிர்ந்த பதிவு, தற்போது அதிலுள்ள அனைவரையும் கடும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. 2090-ல் டைம் டிராவல் செய்து வந்ததாக அந்த பெண் குறிப்பிட்டு, இன்னும் ஒரு சில தினங்களில், அதாவது வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, அமெரிக்காவின் தென் கரோலினா கடும் சூறாவளி வீச உள்ளதாக கூறியுள்ளது பற்றி, நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சிலர், இந்த பெண்ணின் கருத்தால் அதிர்ச்சி அடைந்தாலும், மற்ற சிலர் ஒரு பதிவை வைத்து மட்டும் எப்படி நம்புவது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், ஒரு சில தினங்களில் தென் கரோலினாவில் புயல் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது பற்றி பேசியுள்ள உலக வானிலை அமைப்பு மையம், இடியுடன் கூடிய மழையும் அல்லது மிதமான சூரிய வெப்பமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் உருவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், டைம் டிராவலர் என குறிப்பிட்டு பெண் தெரிவித்தது போல, பேரழிவு மிக்க சூறாவளி வர வாய்ப்பில்லை என்றும் வானிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

TIME TRAVEL, HURRICANE, DISASTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்