'ஜாலியா டிக் டாக் செய்து கொண்டிருந்த இளம்பெண்'... 'திடீரென கதவு அருகே கண்ட காட்சி'... ஒரு நொடி அப்படியே ஆடிப்போக வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் Maryland பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் Hannah Viverette. இவர் டிக் டாக்கில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நபர். அவ்வப்போது டிக் டாக் செய்து பதிவிடுவது அவரது வாடிக்கை. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக் டாக்கில் நடன வீடியோ ஒன்று பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டில் உள்ள பால்கனி வழியாக யாரோ ஒருவர் உள்ளே வருவது போல உணர்ந்துள்ளார்.

'ஜாலியா டிக் டாக் செய்து கொண்டிருந்த இளம்பெண்'... 'திடீரென கதவு அருகே கண்ட காட்சி'... ஒரு நொடி அப்படியே ஆடிப்போக வைத்த சம்பவம்!

ஆனால் வீடியோ எடுப்பதில் ஆர்வமாக இருந்த அவர் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை. பின்னர் மீண்டும் பார்க்கும் போது ஏதோ வாட்டசாட்டமான ஆண் ஒருவர் உள்ளே வருவதைப் பார்த்துள்ளார். அந்த ஒரு நொடி அப்படியே அதிர்ந்து போன அவர், ''யார் நீ, வெளியே போ'' எனச் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அந்த நபரோ, ''நான் உன்னுடைய நண்பன் தான் சத்தம் போடாதே'' என Hannahயை நெருங்கி வந்துள்ளார்.

TikTok Captures the Moment Intruder Allegedly Breaks into woman's Home

ஆனால் உன்னை நான் பார்த்தது கூட இல்லை, நீ என்னுடைய நண்பன் இல்லை எனச் சத்தம் போட்டுள்ளார்.  அந்த நபரோ Hannah நோக்கி நெருங்கி வந்த நிலையில், வேறு வழியில்லாமல் அவர் அருகிலிருந்தவரின் வீட்டில் உதவிக்காகத் தஞ்சம் புகுந்துள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அந்த நபரைக் கைது செய்தார்கள்.

அந்த நபரின் பெயர் Angel Moises என்பது தெரிய வந்தது. பின்னர் தான் அந்த நபர் யார் என Hannahக்கு நினைவிற்கு வந்தது. Angel Moises சில நாட்களாகத் தான் வெளியில் செல்லும் போதெல்லாம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் அதைத் தான் அலட்சியம் செய்ததாகவும் Hannah போலீசாரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் Angel Moisesக்கு ஜாமின் கிடைத்த நிலையில், பயந்து போன Hannah தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே மெக்சிகோவைச் சேர்ந்த Angel Moises, சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு வந்து  Hannah தங்கியிருந்த குடியிருப்பில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதனால் குடியுரிமை அதிகாரிகளால் Angel Moises கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் தனக்கு இன்னும் பயம் போகவில்லை, இதனால் வேறு வீட்டிற்கே சென்று விட முடிவு செய்துள்ளதாக Hannah கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்