‘அப்பா.. என்ன காப்பாத்துங்கன்னு கண்முன்னாடியே விழுந்தா’.. ‘கொஞ்ச நாள்ல அவளுக்கு 4வது பிறந்தநாள்’.. கண்கலங்க வைத்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்குருத்துவாராவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் குடும்பத்தை இழந்த நபர் ஒருவர் உருக்கமாக பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான குருத்துவாரில் சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஹரிந்தர் என்பவர் தனது 3 வயது மகள் தன்யா, மனைவி மற்றும் தந்தை ஆகியோரை பரிதாபமாக பலியாகினர். அவரது தாய் மற்றும் உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தொலைபேசி வாயிலாக ஹரிந்தரை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அதில், ‘இன்னும் சில நாட்களில் என் மகளுக்கு நான்காவது பிறந்தநாள் கொண்டாட இருந்தோம். அவள் கேக் வெட்ட வேண்டும் என கேட்டிருந்தாள். குருத்துவாராவில் எப்போதும் 6.30 மணிக்கு வழக்கமான வழிபாடு இருக்கும். அங்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். பிரார்த்தனை நடந்துகொண்டிருக்கும்போதே சிலர் திருடர்கள் வந்துவிட்டதாக கூச்சலிட்டனர். அப்போது துப்பாக்கிகளுடன் வந்த நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர்.
நான் மேடையில் நின்றுகொண்டு இருந்தேன். உடனே என் உறவினர்கள் என்னை கீழே உட்காரு எனக் கூச்சலிட்டனர். நான் கீழே அமர்ந்தபோது என் மனைவியும், மகளும் என் மீது அப்படியே சரிந்தனர். என் மகளின் தலையில் குண்டு துளைத்தது. அவள் கீழே விழும்போது, அப்பா என்னை காப்பாற்றுங்கள் என கதறிக்கொண்டே விழுந்தாள் (சில நொடிகள் ஹரிந்தர் கதறியழுதார்). என் மனைவி மற்றும் தந்தையின் மார்பில் குண்டுகள் துளைத்தன.
இந்த தாக்குதலில் மக்கள் பலர் தங்களது உறவினர்களை இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிருந்து வெளியேறவே விரும்புகின்றனர். இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் என்னுடையா நாடு என உணர்ந்தேன். ஆனால் இப்போது அப்படி நினைக்கவில்லை. நான் இங்கு வாழவே விரும்வில்லை. காயமடைந்துள்ள தாய், சகோதரர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை’ என கண்கலங்க தெரிவித்துள்ளார்.
News Credits: TheIndianExpress
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா அச்சத்தை பயன்படுத்திய பயங்கரவாதிகள்'...'தற்கொலை படை தாக்குதல்'...27 பேர் பலி!
- 'ஸ்பெயினை துடைத்து எடுக்கும் துயரம்'... ‘ஒத்துழைக்காத மக்களால் நடக்கும் விபரீதம்’... ‘லாக் டவுனை நீக்கிய சீனாவை மிஞ்சிய கோரம்’!
- ‘காதலித்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்த அண்ணன்’... ‘தவறான பழக்கத்தால்’... ‘குழந்தைகளுக்கு சித்தப்பாவால் நேர்ந்த கொடூரம்’!
- ‘நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்த இளைஞர்’... ‘மனைவி, மகன் கண்முன்னே நடந்த பயங்கரம்’... 'நெல்லையில் பரபரப்பு சம்பவம்'!
- 'ஊரே கொரோனா பயத்துல இருந்துச்சு... 'தம்பியோடு சேர்ந்து போதையான அண்ணன்'... அடுத்தடுத்து நடந்த பயங்கரம்!
- 'பாத்ரூம் போறேன்னு போன சிறுமி'...'மாடியிலிருந்து வீசப்பட்ட கொடூரம்'.... சென்னையை நடுங்க வைத்த கோரம்!
- ‘கல்யாணமாகி மூன்றே வருடத்தில்’... ‘தடையாக இருந்ததால்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'தவிக்கும் 2 வயது குழந்தை'!
- ‘சென்னை மெரினாவில் நடந்து சென்ற இளைஞர்’... ‘6 பேர் கொண்ட கும்பலால் நடந்த பயங்கரம்’... ‘சிதறி ஓடிய மக்கள்’‘!
- ‘குவிந்து கிடக்கும் சவப்பெட்டிகள்’... ‘24 மணி நேரமும் இயங்கும் இடுகாடுகள்’... அழைக்கப்பட்ட ராணுவம்.... 'இத்தாலியில் நடக்கும் துயரம்'!
- ‘நண்பர்கள் சென்றபோது’... ‘இருசக்கர வாகனம் மீது கார் மோதி’... ‘கல்லூரி மாணவர் உட்பட 2 பேருக்கு நேர்ந்த பரிதாபம்’!