“எந்த மெரட்டலும் மாத்த முடியாது..” - கிரேட்டா ‘பதிலடி!’ ஆனால் டெல்லியில் வழக்கு பதிவானதா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டெல்லியில் நடந்த விவசாயி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்தினை தொடர்ந்து டெல்லி காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.  டெல்லியில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக நடந்து வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்து உலக பிரபலங்களின் பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

முன்னதாக பிரபல அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, ‘ஏன் யாருமே இதைப் பற்றி பேசுவதில்லை’ என தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து சர்வதேச சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு இந்திய பிரபலங்களான கங்கணா ரனாவத் உள்ளிட்டோர் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்தியாவை இந்தியர்களுக்கு தெரியும், இந்தியர்கள் ஒற்றுமையுடன் ஒரே நாடாக இருப்பர் என்கிற ரீதியில் பேசினர்.

இதற்கு நடுவில்தான் காவல்துறைக்கு எதிராக குற்றவியல் சதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான பகையை ஊக்குவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரேட்டா மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்ததாக தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் விவசாயிகளின் அமைதியான போராட்டத்திற்கு தான் உறுதியாக நிற்பதாகவும், மனித உரிமை மீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலமாக தன்னுடைய நிலைப்பாட்டினை யாராலும் மாற்றிவிட முடியாது என்று இந்த தகவல்களின் அடிப்படையில் கிரேட்டா எதிர்வினை ஆற்றி இருக்கிறார். 

 

ஆனால், இதுபற்றி பேசிய டெல்லி நகர சிறப்பு காவல் ஆணையர் பிரவீர் ரஞ்சன், இந்தியாவில் மதம், இனம், பிறப்பிடம், மொழி ரீதியாகவும் நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பெயர் குறிப்பிடாத சிலர் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.

ALSO READ: “இங்க நிக்குறாரே.. இவர் ஒரு..” .. ‘எப்பேற்பட்ட மனுசன் அவரு’.. ‘துரு துரு’ இளைஞர் செய்த ‘சர்ச்சை’ காரியம்! ‘பரவும்’ டிக்டாக் வீடியோ!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்