ஆடு, கோழிகளை எரிமலைக்கு காணிக்கையாக செலுத்தும் பக்தர்கள்.. 600 வருஷமா நடக்கும் வினோத திருவிழா..உறையவைக்கும் புராண கதை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேஷியா நாட்டில் 600 வருடங்களாக வினோத திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கே ஆடு, கோழிகளை மக்கள் எரிமலைக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "நைட்ல அவன்கூட போன் பேசிட்டே இருக்கா.. என் மனைவி எனக்கு வேணும்".. போலீசுக்கு போன கணவர்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பக்காவான பிளான்..!

உலகம் தோன்றிய நாளில் இருந்தே, கடவுள் பற்றிய பல்வேறு நம்பிக்கைகளும் தோன்றியிருக்கின்றன. மனதில் வேண்டிக்கொண்ட காரியம் நிறைவேற, தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு காணிக்கை கொடுக்கும் வழக்கம் வரலாறு முழுவதும் இருந்திருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கடவுள் நம்பிக்கையும், காணிக்கை செலுத்தும் நடைமுறையும் இருந்ததற்கான சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தோனேஷியாவில் வசித்துவரும் ஒரு பழங்குடி இன மக்கள், எரிமலைக்கு காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதுவும் 600 ஆண்டுகளாக.

ஒவ்வொரு ஆண்டும் டெங்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் ப்ரோமோ மலையைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து ஆடு, கோழிகள், பழங்கள், பூக்கள் மற்றும் காய்கறிகளை அதன் பள்ளத்தில் எறிவதற்காக மலைகளில் ஏறுகிறார்கள். கிழக்கு ஜாவாவில் உள்ள இந்த பழங்குடி மக்கள், தங்களது வேளாண்மை செழிக்கவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் ஒவ்வொரு ஆண்டும் இப்படி தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு காணிக்கை செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

காணிக்கை

மலைப் பகுதிகளில் வசிக்கும் இந்த மக்கள், ப்ரோமோ மலையைச் சுற்றியுள்ள எரிமலையின் முகப்பு பகுதிக்கு செல்கின்றனர். இருப்பினும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த சடங்கில் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் கலந்துகொண்டனர். ஆனால், இந்த ஆண்டு ஏராளமான மக்கள் தங்களது முதுகில் ஆடு, கோழிகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட காணிக்கை பொருட்களை சுமந்தபடி மலையில் ஏறினர்.

எரிமலையின் வாய் பகுதிக்கு அருகே மக்கள் சென்றுவிடாமல் இருக்க, கட்டுப்பாட்டு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடத்தில் இருந்து தாங்கள் சுமந்துவந்த காணிக்கைகளை எரிமலைக்குள் வீசுகின்றனர் இந்த மக்கள்.

வேண்டுதல்

எரிமலையில் தூக்கி வீசப்பட்ட காணிக்கைகளை மறையும் வரையில் கவனிக்கும் இந்த மக்கள் அதன் பின்னர் தங்களுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுக்கும்படி கடவுள்களை வேண்டிக்கொள்கின்றனர். 15 ஆம் நூற்றாண்டில் மஜாபாஹித் அரசின் இளவரசியான ரோரோ அன்டெங் மற்றும் அவரது கணவர் இந்த மலைப்பகுதிக்கு வந்து தங்களுக்கு குழந்தைப்பேறு அளிக்கும்படி கடவுளை வேண்டிக்கொண்டனர் என்றும் அப்போது கடவுள் 25 குழந்தைகளை அந்த தம்பதிக்கு அளித்ததாகவும், ஆனால் கடைசி குழந்தையை எரிமலைக்கு காணிக்கையாக்க வேண்டும் எனவும் கடவுள் கூறியதாகவும் நம்புகிறார்கள் இந்த மக்கள். 

மேலும், டெங்கர் பழங்குடியின் புகழ் மேலோங்க அந்த தம்பதியின் கடைசி மகன் தன்னையே காணிக்கையாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அது தொடர்ந்து இதுநாள் வரையிலும் இந்த எரிமலைக்கு மக்கள் காணிக்கை செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | ஆத்தாடி எம்மாம்பெரிய ரொட்டி.."இவரைத்தான் தேடிட்டு இருக்கேன்".. இந்திய தொழிலதிபர் ஷேர் செஞ்ச வீடியோ..திகைத்துப்போன நெட்டிசன்கள்..!

INDONESIAN, VOLCANO, HINDU RITUAL SACRIFICE, இந்தோனேஷியா, வினோத திருவிழா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்