"ஊரடங்கு இன்னும் முடியல!.. அதனால".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்குடியுரிமை பெறாமல், அமெரிக்க நாட்டில் தங்கி வேலை செய்யும் பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் இந்த எச்-1 பி விசாக்களை அதிகளவில் பெற்று வருகின்றனர்.
எச்-1பி விசாவில் பணியாற்றி வரும் அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்களுள் ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு தற்போது சட்டமாக உள்ள நிலையில் எச்-1பி விசாவில் பணியாற்றி வரும் 2 லட்சம் பேர் உட்பட மொத்தம் 2.5 லட்சம் பேர் அமெரிக்கக் குடியுரிமை கேட்டு வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்காவில் ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மாற்று வேலையைத் தேட வழியில்லை என்பதோடு, 60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காகவும் அனுமதி கோர முடியாது என்றும், ஏற்கனவே பலர் 30 முதல் 40 நாட்கள் வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் இருக்கின்றனர். இந்நிலையில் எச்1பி, எச்4 விசாவை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்தத் தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் நிமித்தமாக, எச் -1 பி விசா முறையை "சீர்திருத்த" மற்றும் தகுதி அடிப்படையில் வழங்குமாறு டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஒரு அறிக்கையில் எச் -1 பி விசா முறை தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறைக்கு நகரும் என்று கூறி உள்ளதோடு, டிரம்ப் நிர்வாகம் மிக உயர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கும் குடியேற்ற முறையை சீர்திருத்தும் என்று அது கூறியுள்ளது. இந்த சீர்திருத்தங்களால் எச் -1 பி திட்டம் அதிக ஊதியம் வழங்கப்படும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க்கப்படும் என்றும் அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாதுகாக்கவும், நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிக திறமை வாய்ந்தவர்களாக இருப்பினும் கூட, அமெரிக்காவின் தொழிலாளர் சந்தையை குறைக்காது என்பதையும் உறுதிப்படுத்த உதவும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உள்நாட்டு மக்களுக்கு 5 லட்சத்துககும் அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தவிர, வெளியில் இருந்து சேவைகளைப் பெறுவதற்கான அவுட்சோர்சிங் பணிகள் முழுவதும் நிறுத்தப்படுவதற்கும் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஜே 1 விசாக்களும் இனி கொரோனாவை குணப்படுத்த முன்வரும் மருத்துவர்களுக்குதான் வழங்கப்படும் என்கிற புதிய கெடுபிடியையும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "யாருக்காச்சும் கொரோனா பரவியிருந்தா மன்னிச்சிடுங்க!".. வைரலான பிரபல டென்னிஸ் வீரரின் உருக்கமான இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
- "37 ஆயிரம் கோடி இழப்பா?".. 'ஐ.டி நிறுவனங்களின் முடிவுதான் காரணமா?'.. புலம்பும் ரியல் எஸ்டேட் கம்பெனிகள்!
- திருச்சியில் திடீரென்று வேகமெடுத்த கொரோனா!.. மதுரையில் இன்று மட்டும் 157 பேர் பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- "ஒரே நாளில் 37 பேர் பலி!".. இன்று 'தமிழகத்தில்' கொரோனா பாதித்தவர்கள் 'முழு விபரம்!'!
- 'சென்னையில் மட்டுமா? இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'!.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'!
- '1 கோடி' பேரு வேலை பார்த்துட்டு இருந்தோம்... ஏற்கனவே '20 லட்சம்' பேருக்கு வேலை போச்சு... இன்னும் 30 லட்சம் பேருக்கு 'இந்த' நெலமை வரலாம்!
- "பூமி தாங்காது டா... விட்ருங்க டா!".. சீனாவில் தொடங்கியது நாய்கறி சந்தை!.. அதிர்ச்சியில் உறைந்த விலங்கின ஆர்வலர்கள்!
- 'கொரோனா பரவுது... அண்ணாவும், எம்.ஜி.ஆரும் மாஸ்க் போடாம நிக்குறாங்க'!?.. தலைவர்கள் சிலைக்கு 'மாஸ்க்' அணிவிப்பு!
- "வொர்க் ஃப்ரம் ஹோம் கேள்விப்பட்ருப்பீங்க!".. 'இது வேற லெவல்!'.. இந்திய ஊழியர்களுக்கும் அடித்த ஜாக்பாட்!
- கொரோனாவுக்கு 'பட்டப்பெயர்' வைக்கும் 'ட்ரம்ப்...' '19 பெயர்கள்' வைத்திருக்கிறாராம்... 'சீனாவை' வித்தியாசமாக கலாய்த்த 'ட்ரம்ப்...'