“அவர் சொன்ன அந்த கடைசி வார்த்தை”.. விமான சக்கரத்திலேயே பயணம்!.. கோமாவில் இருந்து மீண்ட நண்பர் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு நல்ல வாழ்வை தேடி பிரிட்டனை நோக்கி புறப்பட்டவர்கள் இரண்டு நண்பர்கள்.

அந்த இரண்டு பேரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழக்க, இன்னொருவர் கோமாவுக்கு சென்ற கதை உலக அளவில் பிரபலமானது. Themba Cabeka என்கிற 31 ஒரு வயது நபரும் அவருடைய நண்பர் Carlito Vale எனும் இருவரும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனை நோக்கிச் சென்ற விமானம் ஒன்றின் சக்கரத்தில் ஏறி மறைந்து கொண்டனர்.

ஆனால் போகும் வழியில் போதுமான ஆக்சிஜன் இன்றி சுமார் 11 மணி நேரம் பயணித்த இந்த இருவரும் 10,000 கிலோ மீட்டர் கடந்து வந்துள்ளனர். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை விமானம் நெருங்கியபோது, விமானம் தரையிறங்கும் முன்பே வெவ்வேறு இடங்களில் இருவரும் விழுந்துள்ளனர். அதில் ஆக்சிஜன் இல்லாமல் முதலில் மயங்கி கோமா நிலைக்குச் சென்ற Themba, பின்னர் விழுந்திருக்கிறார். அதன் பின்னர் 6 மாதங்கள் கோமா நிலையில் இருந்திருக்கிறார். அவர் பிரிட்டனில் தற்போது குடியுரிமை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன.

இந்த நிலையில் ஒருநாள் பிரிட்டனில் குளிரில் தெருவோரம் அமர்ந்திருந்த Themba-வை Gabriel Frood என்கிற 21 வயது மாணவர் பார்த்துள்ளார். அந்த மாணவர் தன்னால் முடிந்த பணத்தை சேகரித்து Themba வாழ்வதற்கு உதவி செய்திருக்கிறார். இனியும் இப்படி விமான சக்கரத்தில் ஏறும் தவறை செய்யமாட்டேன் என்று கூறும் Themba தானும் தன் நண்பர் Carlito இருவரும் விமான சக்கரத்தில் பயணிக்கும்போது, ஹீத்ரோ விமான நிலையத்தை நெருங்கியபோது Carlito தன்னிடம் கடைசியாக  என்ன சொன்னார் என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.

"நாம் நினைத்தது போலவே நாம் இருவரும் வந்து சேர்ந்துவிட்டோம் நண்பா!" என்று Carlito கூறியிருக்கிறார். அவர் கூறியதும் Themba நினைவை இழந்து மயக்க நிலைக்கு செல்ல அவருடைய நண்பர் Carlito கீழே விழுந்து இறந்துள்ளார்.  இந்த விஷயம் Themba-வுக்கு தெரியாது. ஏனென்றால் அதன் பின்னர் தான் 6 மாதம் Thamba கோமாவில் இருந்திருக்கிறார். கோமாவிலிருந்து எழுந்த பின்னரே தன் நண்பர் Carlito இறந்த விஷயம் அவருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து தமது நண்பர் கடைசியாக சொன்ன வார்த்தைகளை அவர் தற்போது பகிர்ந்திருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்