'ஒரு சேஞ்ச்க்காக இத ட்ரை பண்ணோம்.. வொர்க்-அவுட் ஆயிடுச்சு!!' ... 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு, 48 மணி நேரத்தில் நடந்த அதிசயம்!'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் வுஹான் நகரில் உருவாகி, இதுவரை 361 பேரின் உயிரைக் குடித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸின் அறிகுறிகளுடன் இதுவரை 14 ஆயிரம் பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரை கேரளாவைச் சேர்ந்த 3 பேரை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி உலகையே அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை தாய்லாந்து மருத்துவர்கள் எதிர்கொண்ட விதம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பிற நாடுகளைப் போலவே, தாய்லாந்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 71 வயது பெண் நோயாளி ஒருவருக்குத் தாய்லாந்து மருத்துவர்கள் முதலில் ஹெச்ஐவி தடுப்பு மருந்துகள் மட்டுமே கொடுத்து வந்ததாகவும், ஆனால் அதில் எவ்வித  முன்னேற்றமும் இல்லை என்பதால், அதன் பிறகு ஹெச்ஐவி மற்றும் ஃபுளூ தொற்றுக்கான மருந்து என இரண்டையும் சேர்த்து கொடுத்தபோது 48 மணி நேரத்தில் அந்த மூதாட்டியின் உடல்நிலை சீராகி, படுத்த படுக்கையாக இருந்த அவர் தற்போது எழுந்து அமர்ந்து பேசுவதாகவும், சோதனையின்போது அவருக்கு ’கொரோனா நெகட்டிவ்’ என முடிவு வந்ததாகவும்,  அவரது சுவாசப் பகுதியில் எந்த வைரஸ் தொற்றும் இல்லை” என்றும் தெரியவந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குநர் டாக்டர் ஆண்டனி ஃபாசி பேசும்போது, கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க தற்போது நிரூபிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் இல்லை என்றும், ஆனால் இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

THAILAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்