‘தடுப்பூசி மட்டுமே போதாது’... ‘இதையும் சேர்த்து செய்தால் தான்’... ‘கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்’... ‘உலக சுகாதார அமைப்பு கருத்து’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரசை தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் துவங்கிய கொரோனா வைரல் இன்னும் முடிந்த பாடில்லாமல், தொடர்ந்து வருவதால், மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
அதிலும், அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோ என்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி வைரஸ் பாதிப்பில் இருந்து 90 சதவீதம் திறன் கொண்டது என கடந்த 9-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதேபோல், அமெரிக்காவின் மற்றொரு மருந்து நிறுவனமான மார்டனா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என இன்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படலாம் என்ற உலகளவில் நம்பிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், தடுப்பூசியால் மட்டும் கொரோனாவை தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெட்ரோஸ் கூறியதாவது, ‘மற்ற கருவிகளை தடுப்பூசி பூர்த்தி செய்யுமே தவிர அவைகளுக்கு மாற்றாக அமையாது. தடுப்பூசியால் மட்டுமே பெருந்தொற்றை (கொரோனா வைரஸ்) முடிவுக்கு கொண்டுவரமுடியாது. தடுப்பூசி கொரோனா மரணங்களை குறைக்கவும், சுகாதார அமைப்பின் நிலைமையை சமாளிக்கவும் நம்பிக்கையை அளிக்கும். ஆனாலும், தொடர்ந்து வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் ஏற்படுகிறது.
கண்காணிப்பு தொடர்ந்து நீடிக்க வேண்டும். மக்கள் தொடர்ந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும். மேலும், தனி மனிதர்கள் தொடர்ந்து கண்காணிப்பிற்கு உள்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- முடிவுக்கு வருகிறதா கொரோனாவின் கொடுங்காலம்?.. 'மாபெரும் வெற்றி' என அறிவிப்பு!.. முண்டியடித்துக் கொள்ளும் உலக நாடுகள்!.. அடுத்தது என்ன?
- 'தீபாவளிக்கு மட்டும் இத்தன கோடி விற்பனையா?!!'... 'ஆனா அங்கதான் டிவிஸ்ட்டே!!!'... 'சீனாவுக்கு பெரிய ஷாக்காக கொடுத்த இந்திய மக்கள்!'...
- தமிழகத்தில் மேலும் 17 பேர் கொரோனாவுக்கு பலி!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'தமிழகத்தின் இன்றைய (15-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-V' தடுப்பூசி இந்தியா வந்தாச்சு...! இந்தியால மொதல்ல எங்க வச்சு சோதனை...? - 180 பேர வச்சு டெஸ்ட்...!
- இதுக்கு ஒரு முடிவே இல்லையா...! 'அந்த 2 வகையான இறைச்சில கொரோனா பரவுது...' - அடுத்த குண்டை தூக்கி போட்ட சீனா...!
- ‘தீபாவளிக்கு தடையை மீறி’... ‘பொதுமக்கள் செய்த காரியம்’... ‘மோசமடைந்த நகரங்கள்’... ‘செய்வதறியாது தவிக்கும் மாநில அரசு’...!!!
- 'அவங்க எப்படி இத பண்ணலாம்?'.. ரஷ்யா, வடகொரியாவை... கடுமையாக சாடிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
- ‘2 கோடி அமெரிக்கர்களுக்கு’ .. டிசம்பர் மாதத்துக்குள் வரும் ‘இனிய செய்தி’!.. வெளியான பரபரப்பு அறிக்கை!
- 'தமிழகத்தின் இன்றைய (14-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!