"உலகத்துலயே ஒரு நாட்டின் பிரதமரை இப்படி வரவேற்பதை யாரும் பாத்துருக்க மாட்டோம்!".. 'மருத்துவ ஊழியர்களின்' நூதன' ஆர்ப்பாட்டம்' .. 'தீயாய் பரவும்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெல்ஜியம் நாட்டில் மருத்துவமனைக்கு வருகை தரும் பிரதமரிடம் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக மருத்துவ பணியாளர்கள் திரும்பி நின்று புறமுதுகுக் காட்டி வரவேற்பு தெரிவித்துள்ள சம்பவம் வீடியோவாக பரவி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெல்ஜியத்தில் 55,560 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுள் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துமுள்ளனர். ஆனால் அந்நாட்டில் கொரோனா பரவலுக்கு எதிராக அந்நாட்டு பிரதமர் சோஃபி வில்ம்ஸ் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான உரிய உபகரணங்களை கொடுக்கவில்லை என்றும் உகந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் மருத்துவ பணியாளர்கள் தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு குறைந்த அளவிலான நிதியே ஒதுக்கப்பட்டதாகவும், அதிலும் மருத்துவ பணியாளர்களுக்கு குறைந்த அளவிலான சம்பளமே வழங்கப்படுவதாகவும், பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்களை பணியமர்த்தாமல் நர்சிங் பணியாளர்கள் மற்றும் தகுதியற்ற மருத்துவப் பணியாளர்களையே அரசாங்கம் பணிமயமர்த்தியதாகவும் மருத்துவர்களின் தரப்பில் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் பெல்ஜியத்தின் தலைநகரில் உள்ள செயின்ட் பியர் மருத்துவமனைக்கு பெல்ஜியம் பிரதமர் சோஃபி வில்ம்ஸ்  வருகை தந்தபோது, அவரது காரின் இருபுறமும் அந்த சாலையில் நின்று கொண்டிருந்த மருத்துவர்கள், பிரதமரின் கார் நெருங்க, நெருங்க அவருக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக, வரவேற்காமல்

திரும்பி நின்று கொண்டனர். இதனைப் பார்த்த பலரும், “மருத்துவர்கள் மருத்துவர்கள் தான்.. வன்முறையில் ஈடுபடாமல், கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தாமல், அமைதியாகவும் வலுவாகவும் தங்களது எதிர்ப்பை மருத்துவ பணியாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்” என்று கூறி மருத்துவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்