அப்போ அது இலை இல்லையா?.. இயற்கையின் ஆச்சர்ய படைப்பு.. நெட்டிசன்களை திகைக்க வச்ச வீடியோ.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பார்ப்பதற்கு அச்சு அசலாக இலை போலவே இருக்கும் ஒருவகை பட்டாம்பூச்சியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்போ அது இலை இல்லையா?.. இயற்கையின் ஆச்சர்ய படைப்பு.. நெட்டிசன்களை திகைக்க வச்ச வீடியோ.!
Advertising
>
Advertising

Also Read | பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்து.. மைசூரில் பரபரப்பு.. முழு விபரம்..!

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக இயற்கையின் விசித்திரங்களை எடுத்துரைக்கும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் பார்ப்பதற்கு அச்சு அசலாக இலை போலவே இருக்கும் பட்டாம்பூச்சியின் வீடியோ ஒன்று தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

This Dead Leaf Is Actually Perfectly Camouflaged Butterfly video

மனிதர்கள் இந்த உலகில் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டதாக நம்பப்படுகிறது. ஆனாலும், இந்த பூமி குறித்தும், உயிரினங்கள் குறித்தும் புதுப்புது விஷயங்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்படியும் ஒரு உயிரினமா எனத் தோன்றும் அளவுக்கு நம்முடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் நாம் சில உயிரினங்களை பார்த்திருப்போம்.

அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் உதிர்ந்து போன இலை போலவே இருக்கும் ஒரு பட்டாம்பூச்சி மிக அழகாக இறகை அசைக்கிறது. இறகுகள் ஒருங்கிணைந்து இருக்கும்போது அவை இலை போல காட்சியளிக்கிறது, இறகை விரிக்கும்போது மட்டுமே அது ஒரு பட்டாம்பூச்சி என்பது விளங்குகிறது. உள்பக்க இறகில் நீலம், மஞ்சள், கருப்பு என வண்ணக் கலவை இருக்கிறது. இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. கல்லிமா இனாச்சுஸ் என்று அழைக்கப்படும் இந்த பட்டாம்பூச்சி, இந்தியா மற்றும் ஜப்பானில் காணப்படும் ஒரு வகை நிம்ஃபாலிட் பட்டாம்பூச்சி வகை ஆகும்.

இந்த வீடியோ Fascinating எனும் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த வீடியோ 14 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர். நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு இயற்கையின் விசித்திரம் குறித்து சிலாகித்து வருகின்றனர்.

 

Also Read | 3 வருஷமா மூச்சு விடவே சிரமம்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்திட்டு டாக்டர் சொன்ன விஷயம்.. ஒரு மட்டன் பீஸ் செஞ்ச வேலை..!

DEAD LEAF, BUTTERFLY, CAMOUFLAGED BUTTERFLY

மற்ற செய்திகள்