Shift டைம் முடிஞ்சதுக்கு அப்புறம் வர எந்த ஆபீஸ் Call-ஐயும் எடுக்க அவசியமில்ல.. ஊழியர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்த நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேலை நேரம் முடிந்தவுடன் அரசு அலுவலக மேலதிகாரிகள், ஊழியர்களை எதற்காகவும் தொலைபேசியில்  அழிக்கக் கூடாது என பெல்ஜியம் நாடு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

பெல்ஜியம் நாட்டு அரசு ‘Right to Disconnect’ என்ற ஒரு நடைமுறையை அமல்படுத்த உள்ளது. அதாவது அரசு மேலதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் தங்களது வேலை நேரம் முடிந்தபின்னர் அழைக்கப்படும் தொலைபேசி அழைப்புகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது.

இதற்கு காரணம், கொரோனா ஊரடங்கால் ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனால் அவர்களது வேலை நேரத்தை தாண்டியும் அலுவலக வேலைகளை செய்யும் கட்டாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் என்பது இல்லாமல் போய்விட்டதாகவும், இதன்காரணமாக அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அதனால் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் Right to Disconnect என்ற நடைமுறை பெல்ஜியம் நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் ஊழியர்கள் தங்களது வேலை நேரத்தில் மட்டும் பணிகளை செய்தால் போதுமானது. இதன்பின்னர் வரும் அலுவலகம் தொடர்பான எந்த அழைப்புகளையும் எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனை ஊழியர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனாலும் ஒரு அவசர வேலையை குறிப்பிட்ட ஊழியர் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும் என்ற சூழ்நிலை உருவாகும் போதும் மட்டும் அந்த ஊழியரை தொடர்பு கொள்ளலாம் என பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தனியார் ஊழியர்களுக்கு பொருந்தாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த Right to Disconnect என்ற நடைமுறை ஏற்கனவே பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RIGHTTODISCONNECT, BELGIUM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்