‘கொரோனாவால்’ இறந்தவர்களை ‘குணமடைந்தோர் பட்டியலில்’ சேர்க்கும் நாடு!.. அதுக்கு அவங்க சொன்ன ‘வேறலெவல் காரணம்!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் உயிரிழந்தவர்களை குணமடைந்தவர்களின் கணக்கில் சேர்க்கிறது தென் அமெரிக்க நாடான சிலி. அதற்கு அந்த நாடு கொடுத்துள்ள விளக்கம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் சர்வதேச அளவில் கிடுகிடுக்க வைத்துள்ள நிலையில் அனைத்து நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் சுமார் 5 லட்சம் பேர் குணமடைடைந்ததாக ஆறுதல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

முக்கிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா சக்கை போடு போட்டு நாளொன்றுக்கு 1000, 500 என மனிதர்களின் உயிர்களை பறித்துவருகிறது. இப்படி மேற்கண்ட நாடுகள் அனைத்தும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை குணமடைந்தோர் பட்டியலில் சேர்த்து வரும் நிலையில் தென் அமெரிக்க நாடான சிலி மட்டும் இறந்தவர்களையும் குணமடைந்தோர் பட்டியலில் இணைத்து வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில் கொரோனா பாதித்து இறந்தவர்களிடம் இருந்து வேறு யாருக்கும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இல்லை. அவர்களின் நோய்த்தொற்று அவர்கள் இறக்கும்போது அவர்களோடு முடிந்துவிடுகிறது. அப்படியானால் அவர்களிடம் இருந்து நோய்த்தொற்று விலகுகிறது. இதனால் அவர்கள் குணமடைந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறையால் கொரோனா பாதித்தவர்களின் புள்ளிவிவரத்தை எளிமையாக அடையாளம் கண்டறியலாம் என்று விளக்கம் கூறியுள்ளார். அந்நாட்டில் சுமார் 8,500 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளதும் 92 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்