அடேங்கப்பா..! ரூ.1 கோடி செலவில் தீவுக்கு ‘டூர்’ கூட்டிட்டு போகும் நிறுவனம்.. உச்சக்கட்ட உற்சாகத்தில் ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஒன்று 1 கோடி ரூபாய் செலவு செய்து சுற்றுலா அழைத்து செல்லும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மனைவி, மருமகளை கொன்றது ஏன்..? கைதான கணவர் அதிர்ச்சி வாக்குமூலம்..!

கொரோனா காலம்

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. பல்வேறு நிறுவனங்களில், ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய ஏற்பாடு செய்ததன் மூலமாக நிலைமையை ஓரளவுக்கு சமாளித்து வந்தன. தற்போது தடுப்பூசி செலுத்தி கொண்ட பணியாளர்களுடன் சமூக இடைவெளி, கட்டாய முகக்கவசம், சானிடைசர் போன்ற கட்டுப்பாடுகளுடன் சில நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு இக்கட்டான சூழலிலும் நிறுவனத்துக்கு உறுதுணையாக இருந்த ஊழியர்களை நிறுவனங்கள் ஊக்குவிக்க தவறவில்லை.

இங்கிலாந்து

இதுபோன்ற ஒரு நிகழ்வு, இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது. அந்நாட்டின் வேல்ஸ் மாகாணத்தில் ‘யோக் ரெக்ரூட்மெண்ட்’ (Cardiff-based Yolk) என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக 4 நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல இந்த நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 55 ஊழியர்களையும் ஸ்பெயின் நாட்டில் உள்ள டெனரிஃப் தீவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1 கோடிக்கும் மேல்) வரையில் செலவு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுலா

இதுகுறித்து யோக் ரெக்ரூட்மெண்ட் நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஊழியர்கள் அனைவரும் டெனரிஃப் தீவுகளுக்கு பறக்க இருக்கின்றனர். நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமல்ல, அனைவரும் செல்கின்றனர். 2021-ம் ஆண்டில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற ஒவ்வொருவரும் உதவினர். நிறுவனத்தின் விடுமுறை கொண்டாட்டத்தில் ஒருவரையும் தவறவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்சாகத்தில் ஊழியர்கள்

இந்த நிறுவனத்தின் முதன்மை கமர்சியல் அதிகாரி பவன் அரோரா கூறுகையில், ‘2020-ம் ஆண்டு அனைத்து தொழில் துறைக்கும் மிக சவாலான காலகட்டமாக இருந்தது. எங்கள் பணியாளர்கள் அனைவரும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து பணிபுரிய நேர்ந்தது. அதற்குப் பின் மீண்டும் நகர்ப்புற பகுதிக்கு வந்தனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் செய்த பணிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்’ என கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் தங்களது நிறுவனமும் இதேபோல் அழைத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

என்னது ‘அந்த’ டீம் தோனியை எடுக்க போட்டி போட்டாங்களா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. ரிச்சர்ட் மேட்லி பகிர்ந்த சீக்ரெட்..!

COMPANY, EMPLOYEES, VACATION, கொரோனா காலம், ஊழியர்கள், சுற்றுலா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்