3-ஆம் உலகப்போர் வந்தா.. நிச்சயம் அந்த ஆயுதத்தை எறக்குவோம்.. ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை.. கலக்கத்தில் உலக நாடுகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அழிவு மிகவும் மோசமானதாக இருக்கும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை செய்துள்ளார்.

Advertising
>
Advertising

“எவ்வளவு நெருக்கடி வந்ததுனு உங்களுக்கே தெரியும்”.. ET பட விழாவில் ‘ஜெய் பீம்’ குறித்து சூர்யா பேச்சு..!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போரால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 7-வது நாளாகத் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. தற்போது தலைநகர் கீவ்-வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருகிறது.

இதனிடையே போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அதில், ‘எங்கள் நாட்டின் இறையாண்மையைக் காக்க தான் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தி வருகிறோம். பிற நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் எங்களுக்கு கொஞ்சமும் இல்லை. ஆனால் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாகப் பிற நாடுகள் அணி திரண்டால், அது வேறு சில விரும்பத்தகாத முடிவுகளுக்கு வித்திடும். அதை நாங்கள் விரும்பவில்லை.

ஆனால் அப்படி ஒரு தாக்குதல் நடந்தால், அது இதுவரை நடக்காத ஒன்றாக இருக்கும். மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால், அதில் நிச்சயம் அணு அயுதம் பயன்படுத்தப்பட்டு பெரிய அளவில் சேதம் ஏற்படும். அதை எங்கள் நாடு விரும்பவில்லை. ஆனால் எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் டிம்ட்ரோ குலேபா உலக நாடுகளை எச்சரித்துள்ளார். சுமார் 6000-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ரஷ்யா வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல தடவை கண்டிச்சும் கேட்கல.. வேறொரு வாலிபருடன் பேசிய முன்னாள் காதலி.. ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து காதலன் செய்த காரியம்..!

THIRD WORLD WAR, NUCLEAR WEAPONS, RUSSIA, RUSSIAN FOREIGN MINISTER, SERGEI LAVROV, மூன்றாம் உலகப்போர், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், டிம்ட்ரோ குலேபா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்