தோல், நகம், உதடுகளைக் கவனியுங்கள்.. இதெல்லாம் இருந்தால் ஒமிக்ரானாக இருக்கலாம் – மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் ஒமிக்ரான் வேரியன்ட் காட்டுத்தீ போல பரவிவருகிறது. அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் தொற்று எண்ணிக்கை 10, லட்சத்தைத் தொட்டது. இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவும் வேகம் கவலையளிப்பதாக உலக சுகாதார மையம் கவலை தெரிவித்துள்ளது.
பொதுவான அறிகுறிகள்
இந்நிலையில் இருமல், சளித்தொல்லை, தொண்டை வறண்டு போதல், தலைவலி, லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகளில் வலி, உடல் சோர்வு ஆகிய எட்டு அறிகுறிகளும் ஒமிக்ரான் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு பொதுவாக ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில் The Zoe எனும் கொரோனா சோதனை அமைப்பு நடத்திய சமீப ஆய்வில் இரண்டு புதிய ஒமிக்ரான் அறிகுறிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, வாந்தி மற்றும் பசியின்மை ஆகிய அறிகுறிகள் ஒமிக்ரானாக இருக்கலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.
ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறதா..? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்..!
புதிய அறிகுறிகள்
இதனிடையே அமெரிக்காவைச் சேர்ந்த நோய்க்கட்டுப்பாட்டு இயக்குனரகமான சிடிசி, ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில புதிய அறிகுறிகள் தோன்றலாம் என அறிவித்துள்ளது. இதன்படி உதடு, தோல் மற்றும் நகத்தில் சில அறிகுறிகள் தோன்றலாம். அதாவது சிலருக்கு தோல் நீல நிறத்தில் மாற்றமடையும் எனவும் உதடு மற்றும் நகம் வெளுத்துப்போகவோ அல்லது நீல நிறத்திற்கு மாறவோ வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை நிறத்தோல் கொண்டவர்களுக்கு நீல நிறமாக மாறும் எனவும் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களுக்கு தோல் வெளுத்துப்போகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது இம்மாதிரியான பிரச்சனையை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சுவாசத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதை உடனடியாக கண்டறிய முடியாது. ஆகவே, உங்களது உடலில் மேற்குறிப்பிட்டபடி உதடு, தோல் மற்றும் நகங்களில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகும்படி தெரிவித்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- IHU வைரஸ் அபாயகரமானதா? என்ன சொல்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்..?
- தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!
- பேராபத்து.. ஓமிக்ரான் தொற்றே இன்னும் முடியல.. அதற்குள் பல வேரியண்ட்டா? WHO வார்னிங்
- விரைவில் பேரிடர் காலம் முடிவுக்கு வருகிறது.. ஒமைக்ரான் குறித்து விஞ்ஞானிகள் முழு விளக்கம்
- வண்டிய நிறுத்துங்க.. காரிலிருந்து இறங்கிச் சென்று முதல்வர் செய்த செயல்..!
- ஒமைக்ரானைத் தொடர்ந்து மற்றொரு புது ரகம்..!- பிரான்ஸில் கண்டறியப்பட்ட IHU வைரஸ்
- நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்.. வரப்போகுது புதிய அறிவிப்பு
- ஒமைக்ரான் வந்தால் என்ன செய்யும்.. எலிகளால் தெரிய வந்த 3 உண்மைகள்!
- தமிழகத்தில் மூன்றாவது அலை.. ரெடியாகும் புதிய மருத்துவ முறை.. மா சுப்பிரமணியன் பேட்டி
- ஒமைக்ரான் பரவல்: சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை