உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்.. "படைகளை அனுப்ப மாட்டோம்" என அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்வரலாற்றின் மிக மோசமான போரினை ரஷ்யா துவங்கி இருக்கிறது. உக்ரைனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிகிறது ரஷ்யா. உக்ரைன் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அச்சம் அடைந்துள்ளனர். நேற்று துவங்கிய போரில் 137 உக்ரைன் மக்கள் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த போர் தொடரும் பட்சத்தில் மீட்க முடியாத நிலைமைக்கு உக்ரைன் தள்ளப்படும்.
இந்நிலையில், ரஷ்யப் படைகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருக்கும் அனைத்து மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும். ரஷ்யர்கள் வெளியே வந்து போருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்திருக்கிறார்.
புதின் மிரட்டல்
இந்நிலையில், "ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகள் வரலாற்றில் இதுவரை சந்திக்காத பின்விளைவை சந்திக்க வேண்டி இருக்கும்" என புதின் எச்சரித்துள்ளார். மேலும், உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லும்படி புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போரை கைவிட உலக நாடுகள் உதவிட வேண்டும் என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின் வாங்கியதா அமெரிக்கா ?
இந்நிலையில் உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் எண்ணம் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம். அதேநேரம் நோட்டோ பிராந்தியங்களின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்க படைகள் பாதுகாக்கும்.
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத்தடை மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ரஷ்யாவின் உயர்தொழில்நுட்ப இறக்குமதிகளில் பாதிக்கும். ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் ஒரு ஆக்கிரமிப்பாளர். புதின் தான் இந்த போரைத் தேர்ந்தெடுத்தார், அதற்காக இப்போது அவரும் அவரது நாடும் கடுமையான விளைவுகளை சந்திக்கும். விடிபி உட்பட மேலும் 4 ரஷ்ய வங்கிகள் மீதான தடை விதிக்கப்படும்.
ரஷ்யாவின் சைபர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம். ரஷ்ய அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை. அவர் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ விரும்புகிறார், அவரது லட்சியம் உலகின் பிற பகுதிகள் உள்ள இடத்திற்கு முற்றிலும் எதிரானது என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
உக்ரைனை மீட்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என பல தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் புதின் பேசி இருப்பது மிக முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உக்ரைன் - ரஷ்யா போர் : "மோடி மனசு வெச்சா அது நடக்கும்.. உடனே புதினுக்கு போன் பண்ணுங்க.." வேண்டுகோள் வைக்கும் தூதர்
- உக்ரைன் மேல ரஷ்யா வான்வழி தாக்குதல் மட்டும் நடத்தல.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
- அப்படியே யூடர்ன் அடிச்சு திரும்பி போயிடுங்க.. இந்த பக்கம்லாம் வரக் கூடாது.. ரிட்டர்ன் ஆன ஏர் இந்தியா விமானம்
- குண்டு மழை பொழியும் ரஷ்யா.. பாதுகாப்புக்காக கூட்டம் கூட்டமாக உக்ரைன் மக்கள் செல்லும் இடம்..!
- ரஷ்யா - உக்ரைன் போர்.. "அவர்கிட்ட சீக்கிரம் பேசுங்க".. பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைக்கும் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது டெல்லியில்?
- தீவிரம் ஆகும் உக்ரைன் ரஷ்யா போர்.. தமிழர்கள் உதவி கிடைக்க வழி அமைத்த தமிழக அரசு
- யாரவது எங்கள காப்பாத்துங்க.. ரஷ்யாவுடன் போர் தொடங்கியுள்ள நிலையில் வேண்டுகோள் விடுத்த உக்ரைன்
- எங்களுக்கும் உக்ரைனுக்கும் நடக்குற போர்ல யாராவது குறுக்க வந்தா.. வரலாறு காணாத அழிவ சந்திப்பாங்க.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடும் எச்சரிக்கை
- உக்ரைன் மீது தாக்குங்கள்.. போரை அறிவித்த ரஷ்யா.. புதின் உத்தரவால் பெரும் சிக்கல்
- தொடங்கியது ரஷ்யா-உக்ரைன் போர்.. இந்தியாவில் எந்த பொருட்களின் விலை உயர போகுது? நிபுணர்கள் எச்சரிக்கை