"போர்ல எங்களோட நிக்க யாருமே இல்ல.. தனியா நிக்குறோம்!".. உக்ரைன் அதிபரின்‌ நெஞ்சை பிழியும் பேச்சு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை இரண்டாம் நாளை எட்டியுள்ள நிலையில் தலைநகர் கீவில் வெடுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கீவ் நகரில் பதற்றமான சூழலில் நிலவுகிறது.  இதனை உக்ரைன் அரசும் உறுதி செய்துள்ளது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் போர் விமானத்தை தங்களின் ஏர் டிஃபன்ஸ் சிஸ்டம் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனை ரஷ்ய உள்துறை அமைச்சரின் ஆலோசகர் ஆன்டன் ஹெரான்ஸ் சென்கோ தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

அந்த விமானம் குடியிருப்புப் பகுதியில் இருந்த 9 அடுக்குமாடி குடியிருப்பில் விழுந்து நொறுங்கியது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் ஆளில்லா விமானமா என்ற சந்தேகம் இருப்பதாக உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.  உக்ரைன் மீதான தாக்குதல் வலுத்துள்ள நிலையில் தலைநகர் கீவில் உள்ள மக்கள் ரயில்கள், கார்கள் மூலம் வெளியேறி வருகின்றனர். ஆனால் 18 வயதுள்ள 60 வயதான ஆண்கள் வெளியேற உக்ரைன் தடை விதித்து வருகிறது. மேலம், உக்ரைனின் வடகிழக்கு எல்லையில் உள்ள ஜேப்போரிஸியா பகுதியைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பகுதி அஸோவ் கடற்கரையை ஒட்டியுள்ளது.

செர்னோபில் உள்ள அணு உலை பாதுகாப்பு ஊழியர்களை ரஷ்யா சிறைப்பிடித்துள்ளது. ரஷ்ய படைகள் வீசிய குண்டு ஒன்று செர்னோபில் அணுக்கழிவில் விழுந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை கைப்பற்றி உள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டிடத்தில் ரஷிய தேசியக் கொடியை அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஏற்றியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

தலைநகர் கீவில் ஊடுருவியுள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக பேசியுள்ளார். அதில், "உங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம். இதுவரை வீரர்கள், பொதுமக்கள் என எங்கள் தரப்பில் 137 பேர் இறந்துள்ளனர். 316 பேர் படுகாயமடைந்துள்ளனர். நானும் எனது குடும்பத்தினரும் இன்னும் கீவில் தான் இருக்கிறோம்.

ரஷ்ய படைகளின் இலக்கு நாங்கள் தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். பொதுமக்கள் ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்குமாறு வேண்டுகிறோம். உக்ரைனை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்வதே ரஷ்யாவின் இலக்கு" என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.

RUSSIA, UKRAINE, ZELENSKY, PUTIN, TWITTER, UKRAINE PEOPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்