ஜாலி ரெய்டுக்கு போய்.. 160 அடி உயரத்துல சிக்கிய பயணிகள்.. என்ன நடக்குதுன்னு தெரியாம முழிச்சப்போ ஊழியர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரோலர் கோஸ்டரில் பயணிக்க சென்ற மக்கள் 160 அடி உயரத்தில் சிக்கித் தவித்த சம்பவம் ஸ்பெயினில் நடைபெற்றுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ஸ்கூல் லீவு விட்டாச்சுன்னு.. இதையெல்லாம் பண்ண கூடாது.. அன்புடன் உங்களது கலெக்டர்".. குழந்தைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி எழுதிய பாச கடிதம்.. வைரல் பதிவு..!

பொதுவாகவே ரோலர் கோஸ்டரில் பயணிப்பது என்பது பலருக்கும் பிடித்திருக்கும். சாகச பிரியர்களுக்கு விருப்பமான இந்த பயணம், எப்போதும் நாம் நினைத்தபடியே அமைவதில்லை. ரோலர் கோஸ்டரில் பயணிப்பவர்கள் சந்திக்கும் முதல் சிக்கலே அதன் அதீத உயரம் தான். வளைந்து நெளிந்து ஆகாயத்தை தொட்டு பயணிக்கும் இந்த ரோலர் கோஸ்டர் அந்தரத்தில் நின்றுவிட்டால் எப்படி இருக்கும்? அதுவும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் என்றால்? உண்மையாகவே அப்படி நடந்திருக்கிறது.

தகிக்கும் கோடை

ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத வெப்ப அலை வீசிவருகிறது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் கடுமையான வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள தீம் பார்க்குக்கு போன மக்கள் பயங்கரமான அனுபவத்துடன் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்கள்.

ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட்-ல் இருக்கிறது பார்க் டி அட்ராசியோன்ஸ் தீம் பார்க். இங்கு கடந்த மூன்றாம் தேதி சென்ற சிலர் தங்களது வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பிரபல அபிஸ்மோ எனும் ரோலர் கோஸ்டரில் சிலர் ஏறியிருக்கின்றனர். ஆராவாரத்துடன் துவங்கிய பயணம் கொஞ்ச நேரத்திலேயே நின்றுவிட்டது. காரணம் தெரியாமல் மக்கள் குழம்ப அப்போதுதான் கீழே இருந்த அதிகாரிகள் உண்மையை கூறியுள்ளனர்.

அதிர்ச்சி

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் அதனை சரி செய்யும் வகையில் பொறுமையுடன் காத்திருக்குமாறும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதனையடுத்து அந்த தீம் பார்க்கில் மற்ற விளையாட்டுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து ஒருமணி நேரம் முயற்சித்து அதிகாரிகள் அந்த ரோலர் கோஸ்டரை தரைப்பகுதிக்கு இறங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் அந்த தீம் பார்க் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இரவு பார்க் மூடப்படும் நிலையில், மீட்பு நடைபெற்றதாகவும் அவசர உதவிகள் ஏதும் செய்யப்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அதில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும் அவர்கள் வெப்பநிலையால் சோர்வடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாட்ரிட்-ல் 37 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

Also Read | "பொண்டாட்டியுடன் சேர்த்து வைங்க.. இல்லைன்னா".. செல்போன் டவரில் ஏறிய இளைஞர்.. டக்குன்னு போலீஸ் எடுத்த முடிவு.. பரபரப்பான சென்னை..!

ROLLERCOASTER, THEME PARK, THEME PARK GOERS TRAPPED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்