'பூமியை' நோக்கி வரும் 'சிறு கோள்'... இந்த தேதியில் உலகம் 'அழிந்து' விடுமா?... 'இணையத்தில்' வைரலாக பரவும் 'தகவல்'...
முகப்பு > செய்திகள் > உலகம்வரும் ஏப்ரல் 29ம் தேதி உலகம் அழிந்து விடும் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய சர்ச்சையாக, வரும் ஏப்ரல் 29ம் தேதி உலகம் அழியப் போவதாக பரப்பப்படும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இமயமலை அளவில் உள்ள உள்ள சிறு கோள் ஒன்று பூமி மீது மோத இருப்பதாகவும், அது ஏப்ரல் 29ம் தேதி மோதும் என்றும், அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த சிறிய வீடியோ ஒன்றும் அந்த வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் பூமியை நோக்கி சிறுகோள் ஒன்று வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில் செய்தி நிறுவனம் ஒன்றின் லேகோவும் இடம்பெற்றுள்ளது.
ஏப்ரல் 29ம் தேதி ஒரு சிறுகோள் பூமி அருகில் வர இருப்பதாக நாசா ஏற்கெனவே கூறியுள்ளது. இந்தத் தகவல்தான் இணையவாசிகளை பரபரப்பில் ஆழ்த்திய வைரல் பதிவுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த சிறு கோளுக்கு (52768) 1998 OR2 என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். உண்மையில் இந்த கோள் பூமியிலிருந்து நிலா இருப்பதை விட 16 மடங்கு தூரத்தில் தான் பூமியை கடக்கும் என நாசா கணித்துள்ளது.
அது ஒரு சிறு கோள் என்பதால் அதன் திசை மற்ற கோள்களின் ஈர்ப்பு விசையால் மாறக்கூடும் என்றாலும் அதில் பெரிய மாற்றம் நிகழ வாய்ப்பு இல்லை என்றே நாசா கூறியுள்ளது.
பூமி அருகே வர இருக்கும் இந்த சிறுகோளை நாசா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுகுறித்த போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
‘இயேசுநாதர்’ சிலையில் இருந்து வடிந்த ‘நீர்’.. தேவாலயத்தில் குவிந்த மக்கள்.. நெல்லை அருகே பரபரப்பு..!
தொடர்புடைய செய்திகள்
- ‘நிச்சயம் உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்!’.. நாசா செல்லும் வாய்ப்பைப் பெற்ற பொறியியல் மாணவி!
- பூமியை நோக்கி வரும் 'எரிகல்'...! '4 கி.மீ.' அகலம்... மணிக்கு '31,320 கி.மீ.' வேகம்... 'ஏப்ரல் 29'ம் தேதி... 'ஆபத்து' இருக்குமா என்று 'நாசா' விளக்கம்...
- 'படிக்கறது 9-ம் வகுப்பு தான்'... 'நாசாவுக்கு போகும்'... 'நாமக்கல் அபிநயா'... 'அப்டி என்ன செஞ்சாங்க'!
- ‘உத்து பாத்தாதான் தெரியும்!’.. ‘சூரிய ஒளியில் புள்ளி போல் தெரியும் பூமி!’.. ‘30 வருஷத்துக்கு’ பின் நாசா ‘புதுப்பித்து’ வெளியிட்ட ‘வைரல்’ புகைப்படம்!
- 'தம்பி நீங்க வந்துருங்க ப்ளீஸ்'... 'பி.டெக்' மாணவனை துரத்திய வாய்ப்பு'... மாணவனின் அட்ரா சக்க பதில்!
- VIDEO: 'நிலவில் வாக்கிங்... விண்வெளியில் வேலை... 328 நாட்கள் விண்வெளி சாகசம்... சாதனை படைத்த சிங்கப்பெண்... கொண்டாடித் தீர்த்த நண்பர்கள்!'
- 'எங்க புள்ளைய அமெரிக்காவுக்கு அனுப்பணும், ஆனால்...' 'சிறு வயதிலிருந்தே அப்துல் கலாமின் புத்தகங்களை படித்ததால்...' மாணவியின் கனவு நனவாகுமா...?
- முதலில் 'நிலவு'... அடுத்தது 'செவ்வாய்' ... விண்வெளி சுற்றுலாக்கு தயாராகும் இந்தியன்... நாசா அறிவிப்பு...!
- ‘நான் விக்ரம் லேண்டரை கண்டுபிடிச்சிட்டேன்’!.. உலகை திரும்பி பார்க்க வைச்ச சென்னை இன்ஜினீயர்..!
- 'ஆனாலும் எங்களுக்கு நீங்க பெரிய இன்ஸ்பிரேஷன்'.. 'அதனால'.. 'நாசாவின் புதிய அறிவிப்பு!' .. வைரல் ட்வீட்!