காதல் ரசம் சொட்ட பேசியது அமைச்சரா? ஆசையோடு பேசி 73லட்சத்தை இழந்த பெண்.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > உலகம்இன்றைய நவீன காலத்தில் ஆன்லைன் மோசடி அதிகமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலானோர் டெபிட் கார்டின் நம்பர், பின் நம்பர் கேட்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி போன் வந்திருக்கும். விவரமானவர்கள் தப்பியிருப்போம். அந்த விவரம் இல்லாதவர்களில் பலர் பல ஆயிரங்களையும் சிலர் சில லட்சங்களையும் கூட இழந்திருப்பார்கள். அந்த வகையில், பெண் ஒருவரை லத்வியா நாட்டின் அமைச்சர் படத்தை பயன்படுத்தி ஒருவர் ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த ஷெரான் புல்மர் என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக தனது கணவனை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், முகநூல் மூலம் இவருக்கு ஆண் ஒருவரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவர் அமெரிக்கா ராணுவ வீரர் என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். மேலும், அந்த நபர் தனது முகநூல் கணக்கில் லத்வியா நாட்டின் அமைச்சர் மெர்ஃபியின் படத்தை வைத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பயன்படுத்தி அந்த நபர் இப்பெண்ணிடம் பேசி வந்துள்ளார். அவர் சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளில் இருப்பதாகவும், அவருடைய மனைவி இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு தனிமை மிகவும் வெறுமையாக உள்ளதாகவும் பேச ஒரு நபர் வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, நாளடைவில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துள்ளது. பின்பு ஒரு நாள், அந்த நபர்
ஷெரானிடம் தான் சிரியாவில் இருந்து வெளியே வர மற்றும் அங்கு அவருக்கு ஏற்பட்ட மருத்துவமனை செலவிற்கு பணம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து, ஷெரான் அவருக்கு சுமார் 87000 பிரிட்டிஷ் பவுண்ட் அனுப்பியுள்ளார். மேலும், பிட்காயின் மூலமாக அவர் அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 87 லட்சம் ரூபாய் ஆகும். பணம் அனுப்பிய நாளில் இருந்து அந்த நபரிடம் இருந்து ஷெரானுக்கு எந்த அழைப்பும வரவில்லை. பின்புதான் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பொண் காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு இந்த விவகாரம் தொடர்பான உண்மை தெரியவந்துள்ளது. அதன்படி ஃபேஸ்புக்கில் லத்வியா நாட்டின் அமைச்சர் படத்தை பயன்படுத்தி 100க்கும் மேற்பட்ட போலி கணக்குள் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் சில கணக்குகள் பலரிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்து மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நடுராத்திரியில்.. டாக்டரை கட்டிபோட்டுவிட்டு அந்த கும்பல் செய்த காரியத்தை பாருங்க.. திண்டுக்கல்லில் நடந்த ஷாக்
- வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் வந்த வினை.. தோழிகளுக்குள் முற்றிய சண்டை.. இரவில் நடந்த விபரீதம்!
- "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்".. ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாருக்கு ஸ்கெட்ச்.. CCTV-யில் சிக்குன மருமகள்
- பெற்ற மகளுக்கு ஒரு தாய் செய்யுற காரியமா இது? அநியாயமாக ஏமாந்து போன இளைஞர்!
- மகனை அடக்கம் செய்த சில நாளில்.. மருமகளின் செல்போனை பார்த்து ஆடிப்போன மாமனார்.. நடுரோட்டில் மறியல்
- காதலனை நைசாக பீச்சுக்கு கூட்டி சென்ற காதலி.. நண்பர்களுடன் சேர்ந்து போட்ட பிளான்.. ஆடிப்போன போலீஸ்
- பல பெண்களுடன் தொடர்பு... மனைவியை கொலை செய்து நாடகம்.. தாத்தாவை கைது செய்த போலீஸ்!
- "என்னுடைய பெரிய மார்பகங்களை பார்த்து எல்லோரும் கிண்டல் பண்றாங்க" - இளம்பெண் எடுத்த துணிச்சல் முடிவு..!
- மெசெஜ் பண்ணிட்டு தெரியாம கூட இப்படி செஞ்சிறாதீங்க.. பேஸ்புக் மார்க் சக்கர்பெர்க் எச்சரிக்கை.. புது அப்டேட்..!
- நண்பனை கொன்னுட்டு.. தப்பிக்க திருட்டு கேசில் மாட்டி.. போலீஸ் கொலையாளிய கண்டுபிடிச்ச நேரத்துல திடீர் ட்விஸ்ட்.. ஸப்பா.. க்ரைம் த்ரில்லர் படம் மாரி இருக்கு..