இனி 'பொறுத்துக்' கொண்டிருக்க 'முடியாது...' 'தேவைப்பட்டால்' செயலில் 'இறங்குவோம்...' 'சீனாவை' வெளுத்துவாங்கிய 'மைக் பாம்பியோ...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய வீரர்கள் மீது சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சினாவின் சர்வாதிகார போக்கை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சீனா- இந்தியா ராணுவ வீரர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய அரசு அத்துமீறித் தாக்கிய சீன அரசை கண்டித்து அதன் பொருட்களைப் புறக்கணிக்க வலியுறுத்தியது.

தற்போது இந்தியாவின் நட்பு நாடான அமெரிக்கா சீனாவின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு கருத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ இந்த தாக்குதல் குறித்துப் பேசுகையில், ‛சீனா தென் சீன கடலில் ராணுவத் தளத்தை அமைத்து அராஜகத்தில் ஈடுபடுகிறது. அண்டை நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியது அண்டை நாடுகள் மீதான சீனாவின் அராஜகப் போக்கைக் காட்டுகிறது. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் விரும்பும் அனைவரும் சீனாவின் சர்வாதிகார கம்யூனிஸ அரசை எதிர்க்க வேண்டும்,' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் எல்லைப் பிரச்னையில் சீனா ஈடுபட்டு வருவது மட்டுமல்லாமல் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடனும் பொருளாதார விஷயங்களில் சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.

மேலும், அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டாக்க சீனா பல பொய்த்தகவல்களைப் பரப்பி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

சீன பொலிட்புரோ உறுப்பினர் யாங் ஜைசி இன் ஹவாயை சந்தித்துப் பேசிய பாம்பியோ, இனி சீன கம்யூனிஸ கட்சியின் செயல்பாடுகளை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. தேவை ஏற்பட்டால் அமெரிக்கா செயலில் இறங்கும் எனக் கூறி உள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்