'கொரோனாவ பரப்பிட்டு மாஸ்க் வித்து லாபம் பாக்குறாங்க...' 'அவங்களையும்' கைக்குள்ள போட்டுக்கிட்டு ரொம்ப ஆடுறாங்க...! அமெரிக்கா குற்றச்சாட்டு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் பொருளாதாரத்தை கீழே இறக்கவே சீனா திட்டமிட்டு கொரோனா பரப்புகிறது எங்களிடம் ஆதாரமும் உள்ளது என பத்திரிகையாளரின் சந்திப்பில் கூறியுள்ளார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்.

கொரோனா பரவிய நாள் முதல் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் சலிக்காமல் மற்றொரு நாட்டை குறை கூறிக்கொண்டும் உள்ளன.  சீனா திட்டமிட்டே கொரோனா வைரஸ் பரப்பியுள்ளது என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

இதனை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோவும் கொரோனா வைரசை பரப்பிவிட்டு சீனா கொள்ளை லாபம் பார்க்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள தேவையான மாஸ்க், காகிள்ஸ், மருத்துவர்கள் அணியும் கொரோனா பாதுகாப்பு உடைகள் தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் சீனாவிடமே உள்ளது. இதை பயன்படுத்தி சீனா இவற்றை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் பெரும் லாபம் ஈட்டுகிறது. இந்த கொரோனா காலத்தில் அதிகமாக லாபம் ஈட்டி வருவது சீனா தான் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சீனாவை எதிர்க்கும் வகையில் அந்நாட்டின் மீது மறைமுகமாக பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்க முற்பட்டு வருகிறது. இதனால் சீனா கேட்ட நிதியை அமெரிக்க அரசு ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனத்தை தன் கைக்குள் போட்டுக்கொண்டு ரொம்ப ஆட்டம் போட்டு வருவதாகவும், அமெரிக்க பொருளாதாரத்தை கீழே இறக்கத்தான் சீனா கொரோனா வைரஸை பரப்பியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன எனவும் கூறியுள்ளார். அமெரிக்கா ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாது எனவும் சாடியுள்ளார் மைக்கேல் பாம்பியோ.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்