எண்ட் கார்டு போட்டு எகத்தாளமாடா பண்றீங்க.. எனக்கு எண்டே கிடையாது.. ட்ரம்ப் செய்த தரமான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைதளத்தை தொடங்கியுள்ளார்.

Advertising
>
Advertising

அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபரானார். சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையில் அவதூறாகக் கருத்துகள் பதிவிட்டு வந்ததால் ட்விட்டர் நிறுவனம் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. அதேபோன்று ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் யூடியூபிலிருந்தும் அவரது கணக்குகள் முடக்கப்பட்டன. கூகுள் நிறுவனம் காலவரையற்ற தடை விதித்தது.  ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டரை ஆண்டுகள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப் புதிதாக சமூக வலைதளம் ஒன்று தொடங்கவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது. டிரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (Trump Media & Technology Group TMTG) என்ற நிறுவனம் சார்பில் ட்ரூத் சோஷியல் என்ற சமூக வலைத்தளத்தை தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார் ட்ரம்ப். அதன் முன்னோட்டமாக 'From the Desk of Donald J. Trump' என்ற ப்ளாக் ஒன்றையும்  ஆரம்பித்தார்.  சோசியல் மீடியாக்களில் அவர் பிளாக் செய்யப்பட்டதால், தனது ப்ளாக் பக்கத்தை ஒருமாதத்திலேயே மூடினார்.

இந்நிலையில், 'Truth Social’ என்ற செயலியை அறிமுகம் டொனால்டு டிரம்ப்  அறிமுகம்  செய்துள்ளார். இந்த செயலி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மாதிரியான சமூக வலைதளங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ட்ரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்ப குழுமம் வடிவமைத்துள்ளது. மார்ச் மாதம் முதல் இந்த செயலி பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'பயனர்கள் என்ன நினைக்க வேண்டும். தளத்தில் யார் இருக்கலாம் அல்லது இருக்கக்கூடாது என்பதை தன்னிச்சையாக எடுக்கும் சிலிக்கான் வேலியிலிருந்து இயங்கி வரும் சமூக வலைதள நிறுவனங்கள் போன்று இவை இயங்காது' என ட்ரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்ப குழும தலைமை நிர்வாக அதிகாரி Devin Nunes தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து,  ட்ரம்ப் புதிதாக தொடங்கி இருக்கும் அவரது சமூகவலைதளத்தில், 'தயாராக இருங்கள்... உங்களுக்குப் பிடித்த ஜனாதிபதி விரைவில் உங்களைப் பார்ப்பார்' என்று பதிவிட்டிருந்தார். அவருடைய மகன் ஜீனியர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சில உண்மைகளுக்கான நேரம்' எனக் குறிப்பிட்டு, டிரம்பின் பதிவை அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

DONALT TRUMP, TRUTH SOCIAL, AMRICA FORMER PRESIDENT, US, FACEBOOK, TWITTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்