'அந்த மாத்திரை தான் காரணம்... 'அமெரிக்காவுக்கு வந்த அடுத்த தலைவலி...' 'வரலாறு நம்மை மன்னிக்காது...' அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளால் அதிகம் மக்கள் இறந்துள்ளதாக வெளிவந்த செய்தி அமெரிக்க அதிபரை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. கொரோனா வைரஸிற்கு மருந்து இல்லாத சூழலில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து தான் ஒரே தீர்வு என அமெரிக்க அதிபர் டிரம்ப் வேகமாக இந்தியாவிடமும் இறக்குமதி செய்து 30 மில்லியன் டோஸ்களை இருப்பில் வைத்துள்ளார். ஆனால் தற்போது அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தான் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் 'எனக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றி ஒன்றும் தெரியவில்லை, சில நல்ல ரிப்போர்ட்களும் உள்ளன, ஆனால் தற்போது வெளிவந்தது நல்ல ரிப்போர்ட் அல்ல, இது தொடர்பாக நாம் ஒரு கட்டத்தில் முடிவெடுப்போம்' என தெரிவித்தார்.
தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் வர்ஜீனியா பல்கலைக்கழகம் நிதியளித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா தொற்று உள்ள 368 நோயாளிகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து எடுத்துக்கொண்ட 97 நோயாளிகளுக்கு 27.8% இறப்பு விகிதம் இருந்தது. மேலும் மருந்து எடுத்துக் கொள்ளாத 158 நோயாளிகளுக்கு 11.4% இறப்பு விகிதம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் என்.ஐ.எச். தனது அறிக்கையில், ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அளித்தால் நோயாளியை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து மோசமான விளைவுகள் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும் எனவும், ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை சேர்த்து கொடுப்பதை கண்டிக்கின்றனர். ஏனெனில் இதனால் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.
அதை தொடர்ந்து, அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் பில் பாஸ்க்ரெல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது பாய்ந்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், டொனால்ட் டிரம்ப், அறிவியலை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவை சந்திக்கிறோம் என்று சாடியுள்ளார்.
எவ்வித விஞ்ஞான பூர்வமான ஆய்வறிக்கையும் இல்லாமல் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்பாடு தான் உகந்தது என ட்ரம்ப் கூறிவருகிறார். இது அவரது நிர்வாகத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலாகும். ஆதாரங்களின் அடிப்படையிலான விஞ்ஞானமே அமெரிக்கா தற்போது சந்திக்கும் நெருக்கடியிலிருந்து மீள வழி. அறிவியலை நம்பாமல் அரசியலை நம்பினால் நாம் இன்னமும் தேவையற்ற மரணங்களை சந்திக்க வேண்டியதுதான், வரலாறு நம்மை மன்னிக்காது என்று காங்கிரஸ் உறுப்பினர் பில் பாஸ்க்ரெல் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் மருந்து’... ஆய்வில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்... ‘எச்சரித்த’ இந்திய மருத்துவ கவுன்சில்!
- "இந்தியாவுக்கு சல்யூட்"... "ரிஸ்க்கான டைம்ல கூட 'மாஸ்' பண்றாங்க"... மத்த நாடுங்களும் இத ஃபாலோ பண்ணா நல்லாயிருக்கும்!
- 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக்கிட்டா நல்லது'...ஆனா இவங்க கண்டிப்பா சாப்பிட கூடாது!
- 'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது...' 'ட்ரம்ப் விடாப்பிடியாக இருப்பது ஏன்?...' 'சந்தேகம்' எழுப்பும் 'நியூயார்க் டைம்ஸ்...'
- "மோடி உண்மையில் பெரிய மனிதர் தான்..." நேற்று 'மிரட்டல்' விடுத்த 'ட்ரம்ப்'... இன்று 'திடீர் பாராட்டு'... 'எதற்காகத் தெரியுமா?'
- ‘அனுமன்’, லஷ்மன் உயிரை காப்பாத்த... ‘சஞ்சீவி மூலிகையை கொண்டு வந்து உதவியதுபோல’... ‘எங்க நாட்டுக்கு ‘அந்த’ மருந்தை தாங்க’... பிரதமர் மோடிக்கு ‘உருக்கமான’ கடிதம் எழுதிய அதிபர்!
- கொரோனா சிகிச்சைக்கு பயன்படும்... 'Hydroxychloroquine' (ஹைட்ராக்சிகுளோரோகுயின்) மருந்தை... அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவு!
- "அடுத்த சுற்று தாக்குதல் பயங்கரமாக இருக்கும்..." "எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்..." 'பிரபல' மருந்து நிறுவன 'சிஇஓ எச்சரிக்கை'...
- கொரோனா சிகிச்சைக்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்து.. இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை..!