'உணவு, தண்ணீர்' இல்லாமல் 'ஒரு வாரமாக' தவித்த 'மாற்றுத்திறனாளி' சிறுவன்... 'கொரோனா' சிகிச்சை முடிந்து திரும்பி வந்த 'தந்தைக்கு' காத்திருந்த 'அதிர்ச்சி'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனா சிகிச்சைக்குச் சென்ற தந்தை குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய போது கவனிக்க ஆள் இல்லாமல் தனது மாற்றுத்திறனாளி மகன் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு கதறித் துடித்த சம்பவம் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் மையமாக உள்ள ஹூபே மாகாணத்தை அடுத்த ஹுவாஜியாஹே நகரத்தைச் சேர்ந்தவர் யான் சியாவோவன். இவரது இரண்டாவது மகன் யான் செங் சிறுவயது முதலே பெருமூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரால் எழுந்து நடக்க முடியாது என்பதால் வீல் சேரிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனிடையே சியாவோவான் மற்றும் அவரது மூத்த மகனுக்கு திடீரென காய்ச்சல் அதிகமாக இருந்ததால் இருவரும் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் மாற்றுத்திறனாளி மகன் யான் செங்கை உள்ளூர் அதிகாரிகள் வசம் ஒப்படைத்து விட்டு ஹுவாஜியா நகரத்துக்குச்  சென்று இருவரும் அட்மிட் ஆகியுள்ளனர். இருவருக்கும் 6 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உடல் நலம் தேறி இருவரும் வீடு திரும்பிய போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பராமரிக்க யாரும் இல்லாத காரணத்தால் மாற்றத்திறனாளி சிறுவன் செங் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் தவித்த சிறுவன் செங், உணவு உள்ளிட்ட வசதிகள் கிடைக்காமல் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் இரண்டு முறை மட்டுமே சிறுவனுக்கு உணவு கொடுக்கப்பட்டதாக சீன உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சியாவேவான்  தன் மாற்றுத்திறனாளி மகனை கவனித்துக் கொள்ளுமாறு சீன சமூக ஊடகமான வெய்போவில் பதிவிட்டிருந்த நிலையில், யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தபிறகு சீன அரசு, அக்கட்சியின் உள்ளூர் தலைவர் மற்றும் ஹுவாஜியாஹே நகர மேயர் ஆகியோரைப் பதவிநீக்கம் செய்துள்ளது.

CHINA, CORONA, DISABLED, DISABLED SON, DIED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்