'வார விடுமுறையில் மருத்துவராக மாறிவிடுவேன்'... பிரதமர் சொல்லும் அதிசய காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பூட்டான் பிரதமரான லோட்டே ஷெரிங், சனிக்கிழமைகளில் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பூட்டான் திம்பூவில் உள்ள ஜிக்மி டோர்ஜி வாங்ஜூக் தேசிய மருத்துவமனையில், சனிக்கிழமையன்று நோயாளி ஒருவரின் சிறுநீரக கோளாறுக்கான, சிகிச்சை முடித்துவிட்டு வருகிறார் லோட்டே ஷெரிங். இவர் மற்ற மருத்துவர்களைப் போன்று சாதரண மருத்துவர் அல்ல. பூட்டான் நாட்டின் பிரதமர்தான் ஷெரிங்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பூட்டான் தேர்தலில் அந்நாட்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லோட்டே ஷெரிங். மருத்துவரான இவர், நாட்டின் பிரதமரான பிறகும் தொடர்ந்து மருத்துவ தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் சனிக்கிழமைகளில் அந்நாட்டின் ஜிக்மி டோர்ஜி வாங்ஜூக் தேசிய மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு இவர் பல முறை அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார். இதுகுறித்து லோட்டே கூறும்போது, சிலர் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க கோல்ப் விளையாடுகிறார்கள், சிலர் வில்வித்தை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றும், அதே போல தான் மருத்துவத் தொழிலை செய்வதாகவும் கூறினார். மேலும் இதனைக் கடைசி காலம் வரை தொடர்ந்து செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் சிகிச்சை அளிக்க வந்து செல்லும் நேரங்களில், மருத்துவமனையில் அவரை செவிலியர்கள், மருத்துவர்கள் உள்பட யாரும் அவரை ஆச்சரியமாக பார்க்காமல், தனது பணிகளில் அவரவர் கருத்தாக உள்ளனர். சனிக்கிழமைகளில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரதமர் ஷெரிங், வியாழக்கிழமை காலையில், மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மருத்துவரீதியலான அறிவுரைகள் வழங்கவும் தவறுவதில்லை.

ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்துடன் மட்டுமே நேரம் செலவிடுவதாகவும்  பிரதமர் ஷெரிங் கூறியுள்ளார். வாழ்க்கைமுறை, குழந்தை பிறப்பு விகிதம், தொற்றுநோய்கள், மதுபோதை உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நாடு முன்னேறி வருவதாக பூட்டான் பிரதமர் ஷெரிங் தெரிவித்துள்ளார். மருத்துவத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

BHUTAN, LOTAYTSHERING, DOCTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்