என்னங்க சொல்றீங்க...! ஒத்த திராட்சை பழத்துக்கு 'இவ்வளவு' விலையா...? அதுக்கு ஒரு பழக்கடையையே வாங்கிடலாமே...! - அப்படி என்ன தான் ஸ்பெஷல்...?!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாகவே பழங்காலத்தில் வளர்க்கப்பட்ட பழம் மற்றும் காய் வகைகள் இன்றைய சூழலில் வளருவதில்லை. அப்படியே ஒரு சில இடங்களில் அவை வளருவதால் அவற்றை வாங்க பல நான் நீ என போட்டி போட்டு கொண்டு வருகின்றனர்.

அதில் ஒன்று தான் ரூபி ரோமன் திராட்சை என்று அழைக்கப்படும் இந்த வகை குறைந்த அமிலத்தன்மையுடன் மிகவும் சுவையாகவும், அதிக சர்க்கரை கொண்டதாகவும் அறியப்படுகிறது. இந்த வகையின் ஒவ்வொரு திராட்சையும் 20 கிராமுக்கு மேல் எடையுள்ளதாக இருக்கும்.

இந்த சிவப்பு திராட்சைகளில் ஒரு கொத்து  1.2 மில்லியன் யென்னுக்கு (அதாவது இந்திய விலையில் ரூ.7,55,000 க்கும் அதிகமாக) விற்கப்பட்டது. அதாவது ஒரே ஒரு திராட்சை பழத்தின் விலை சுமார் ரூ.35,000 ஆகும்.

இந்நிலையில், ஜபல்பூரில் வசிக்கும் சங்கல்ப் பரிஹாஸ் என்பவருக்கு சென்னை ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு நபர் சில மா மரக்கன்றுகளை வழங்கியிருந்தார். அதனை தங்கள் இல்லத்திற்கு கொண்டு வந்த மத்திய பிரதேச தம்பதியினர் பழத்தோட்டத்தில் வளர்த்து வருகின்றனர்.

இதனை அவர்கள் சாதாரண இந்திய வகை மா மரக்கன்று என நினைத்து வளர்த்த அவர்களுக்கு ஒரு ஆச்சரியமும் அதிர்ச்சியும் காத்திருந்துள்ளது.

மரங்கள் நன்றாக வளர்ந்த பிறகு தான் தெரிய வந்தது அது சாதாரண மாம்பழங்கள் நிறமாக இல்லாமல் ரூபி சிவப்பு நிறத்தில் இருந்தபோது அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது.

இந்த வகை மாம்பழத்தை பற்றி தெரிந்த பின் தான் தங்களுக்கு இனிமையான ஜாக்பாட் அடித்ததாக உணர்ந்துள்ளனர். அதோடு இந்த சர்வதேச மற்றும் கவர்ச்சியான பழமான ஜப்பானிய மியாசாகி மாம்பழங்கள் சந்தையில் அதிக தேவை உள்ள மாம்பழங்களின் விலையுயர்ந்த வகைகளில் ஒன்றாகும்.

இது கடந்த வருடம் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ மாம்பழங்களை ரூ.2.70 லட்சத்திற்கு விற்கபட்டுள்ளது. இதன்காரணமாக அவர்கள் வளர்க்கும் இரண்டு மியாசாகி மா மரங்களை பாதுகாக்க நான்கு பாதுகாப்புப் பணியாளர்களையும் ஆறு நாய்களையும் பணியில் அமர்த்திய சம்பவம் இந்தியாவில் வைரலாக பேசப்பட்டது.

மற்ற செய்திகள்