பொசுக்குன்னு கோபப்பட்ட pilot.. Airport மொத்தமும் ஆடிப்போச்சு

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்கா: விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்ததால் 143 பேருடன் லண்டன் பயணித்த அமெரிக்க ஜெட்லைனர் விமானம் அவசரமாக புறப்பட்ட இடத்துக்கே திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம்  நிகழ்ந்துள்ளது .

பொசுக்குன்னு கோபப்பட்ட pilot.. Airport மொத்தமும் ஆடிப்போச்சு
Advertising
>
Advertising

உலகம் முழுவதும் 34, 28, 05,157 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 5,592,593 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும்,   276,270,677 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ளது.

The pilot who dropped the unarmed passenger on the plane in the US

ஒமைக்ரான் பாதிப்புகள் ஒருபக்கம் மக்களை வாட்டி வதைத்தாலும் கொரோனா தொற்றால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அனைத்து நாடுகளும் ஊரடங்கில் கட்டுப்பாடு தளர்வுகளுடன் இயங்கி வருகிறது. இதுபோன்ற சூழலில் முகக்கவசம் உயிர்க்கவசம் போன்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் பயணம் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் ஒருவர் முகக்கவசம் அணியாமல் விமானத்தில் பயணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரண்டியை கையில் எடுத்த தமிழசை.. தலைவாழை இலை போட்டு அண்ணாமலைக்கு.. ஒரே வார்த்தையில் உருக வைத்து சபாஷ்!

அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. போயிங் விமானத்தில் 129 பயணிகள் மற்றும் 14 ஊழியர்கள் உள்பட இருந்தனர். விமானம் நடுவானில் பறந்த போது  ஒருவர் மட்டும் முகக்கவசம் அணியவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என விமான பணியாளர்கள் கோரிக்கை விடுத்தும் அவர் கேட்கவில்லை.

பயணி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததால், விமானி உடனடியாக விமானத்தை மியாமி விமான நிலையத்திற்கு திருப்பினார். மியாமி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி பெற்றார். விமானம் தரையிறங்கியதும், முகக்கவசம் அணிய மறுத்த பயணியை போலீசார் கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

பாம்புக்கு ஒன்னும் அடிபடலையே... திடீர் பிரேக் அடித்த ஓட்டுநர்... பரிதவித்த மக்கள்!

பின்னர் முகக்கவசம் அணிய மறுத்த நபரை தடை செய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக அமெரிக்க விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

PILOT, UNARMED PASSENGER, PLANE IN THE UNITED STATES, FLIGHT, அமெரிக்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்