அடேய் 'கூகுள் மேப்'... அது என்னடா 'ஆத்துக்குள்ள' வழி போட்டுருக்க.... உன்ன 'நம்புனா பரலோகத்துக்கே' வழி காட்டுறியே...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று ஆற்றில் மூழ்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவில்  கூகுள் மேப் தொழில் நுட்பம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதால் துல்லியமான வழிகாட்டியாக பொதுமக்களால் நம்பப்படுகிறது. இதனால் கூகுள் மேப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அங்கு அதிகம்.

இந்நிலையில் அமெரிக்காவின்  மிசிசிபி மாகாணத்தில் உள்ள  மின்னிபொலிஸ் (minneapolis) நகரில் வாலிபர் ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆறு ஒன்று குறுக்கிட்டுள்ளது. கூகுள் மேப் காட்டிய வழியில் ஆற்றின் பாலத்தில் ஏறிச் செல்வதற்கு பதிலாக ஆற்றின் குறுக்கே வழி காட்டியுள்ளது. அந்த ஆறு உறைந்து காணப்பட்டதால் பனிப்படலமாக காணப்பட்டது.

கூகுள் மேப் மீது சந்தேகம் இல்லாத நம்பிக்கை கொண்டிருந்த அந்த நபர் உறைந்த ஆற்றின் மீது ஏறி நடந்து சென்றார்.  ஆற்றின் நடுவே திடீரென பனிப்படலம் உடைந்து அவர் ஆற்றில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை போராடி மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

AMERICA, GOOGLE MAP, DROWNED MAN, RIVER, YOUNGMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்