பிள்ளையார் கோவில் தெரு, நியூயார்க், அமெரிக்கா... அட்ரஸ் உண்மைதான்.. பல வருடங்களுக்கு மேலாக தொடரும் பாரம்பரியம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தெரு ஒன்றிற்கு பிள்ளையார் கோவில் தெரு என பெயரிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து சமூக வலை தளங்களில் இதுகுறித்து மக்கள் பரபரப்புடன் பேசிவருகின்றனர்.

Advertising
>
Advertising

"வாம்மா கோவிலுக்கு போலாம்"..பெத்த அம்மாவை ஏமாற்றி அழைத்து வந்து பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டு ஓடிய மகன்.. கண்ணீரில் தாய்

அமெரிக்கா

பழங்காலத்தில் இருந்தே  வாணிபம் செய்ய வெளிநாடுகளுக்கு பயணித்துவந்த இந்தியர்கள் பாரசீகம் உள்ளிட்ட நாடுகள் மட்டும் அல்லாது அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களுக்கும் சென்றுள்ளனர். புதிய நாடுகளில் குடியேறிய இந்தியர்கள் தங்களது பாரம்பரிய பழக்க வழக்கங்களை தொடந்தனர். அதன் அடிப்படையில் பல்வேறு இந்து கோவில்களை உலகமெங்கும் இந்தியர்கள் கட்டினர். அவற்றுள் ஒன்றுதான் அமெரிக்காவில் அமைந்து உள்ள மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில்.

வட அமெரிக்காவில் குயின்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட பகுதியில் இந்த கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில் இருக்கும் தெருவுக்கு முன்னதாக 'பவுனே' என பெயரிடப்பட்டிருந்தது.

அமெரிக்க சுதந்திர போர்

அமெரிக்காவை ஆண்டுவந்த பிரிட்டிஷாரை எதிர்த்து போராடியது அமெரிக்கா. இதில் துணிச்சல் மிக்க வீரராக செயல்பட்ட ஜான் பவுனே என்பவரது நினைவாக இந்த தெருவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.

இதே தெருவின் முனையில் தான் பிரசித்திபெற்ற மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் அமைந்திருக்கிறது. அமெரிக்கா முழுவதிலும் உள்ள இந்திய மக்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

பெயர் மாற்றம்

இந்நிலையில், அந்த பகுதியில் புகழ்பெற்ற கோவிலின் பெயரை அந்த தெருவிற்கு சூட்டவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர் அங்கு வசித்து வரும் இந்தியர்கள். இதனை அடுத்து, இந்தியர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது அந்த தெருவிற்கு Ganesh Temple Street (பிள்ளையார் கோவில் வீதி) என பெயரிடப்பட்டு உள்ளது.

விழா

இந்நிலையில் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அலுவலகத்தில், புதிய தெருப் பலகை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதர் ரந்தீர் ஜெய்ஸ்வால், குயின்ஸ் நகர தலைவர் டொனோவன் ரிச்சர்ட்ஸ், வர்த்தகம், முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான துணை ஆணையர் திலீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேசிய ரந்தீர் ஜெய்ஸ்வால்," இந்திய - அமெரிக்க பிணைப்பின் வெளிப்பாடு இது. மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

அமெரிக்காவில் உள்ள தெரு ஒன்றிற்கு பிள்ளையார் கோவில் தெரு என பெயரிடப்பட்டது தற்போது இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

"அரியர் இருக்கு எனக்கு.. அது ஏன் புரியமாட்டங்குது உனக்கு".. இலங்கையில் மாணவர்கள் நூதன போராட்டம்..!

NEW YORK, NEW YORK STREET, GANESH TEMPLE, பிள்ளையார் கோவில், நியூயார்க்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்