குப்பை அள்ளும் 'ஸ்பைடர் மேன்'... சாகசத்தை விட சுத்தமே முக்கியம்... ரியல் 'ஹீரோவுக்கு' பெருகும் ஆதரவு...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தோனேசியாவில் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வரும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தி ஸ்பைடர் மேன் வேடத்தில் குப்பைகளை அள்ளியவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்தோனேஷியாவில் வருடத்திற்கு 3.2 டன் குப்பைகள் கொட்டப்படுவதாக ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குப்பைகள் அனைத்தும் பெரும்பாலும் கடலுக்குள் கொட்டப்படுகிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவதோடு பெரும் சுற்றச்சூழல் மாசும் ஏற்படுகிறது. இந்த குப்பைகளை அகற்ற வழி தெரியாமல் இந்தோனேசிய அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள பாரிபாரி கடற்கரை பகுதியைச் சேர்ந்த ரூடி ஹார்டோனோ என்பவர் ஸ்பைடர் மேன் உடையணிந்து கடற்கரைப்பகுதியில் தேங்கம் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. ஆரம்பத்தில் சாதாரண உடையில் குப்பைகளை அகற்றியபோது யாரும் இப்பணியில் ஈடுபட முன்வரவில்லை என்றும், தற்போது ஸ்பைடர் மேன் உடையில் இந்த பணியை மேற்கொண்ட போது பலரும் குப்பைகளை அகற்ற முன்வருகின்றனர் என்றும் ரூடி தெரிவித்தார்.

INDONESIA, SPIDERMAN, GARBAGE, SUPPORT PEOPLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்