'ஆண்' வயிற்றில் ஆண் 'குழந்தை'... 'அதிர்ந்து' போன மருத்துவர்கள்... 'தாடி, மீசையுடன்' குழந்தையை பெற்றெடுத்த அதிசயம்...
முகப்பு > செய்திகள் > உலகம்வயிற்று வலி என்று மருத்துவமனை சென்ற ஆணுக்கு, குழந்தை பிறந்த நிகழ்வு இலங்கையில் நடந்துள்ளது.
இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு சென்றுள்ளார். தாடியுடன் வந்த அவரை பரிசோதித்த மருத்துவர் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி வைத்தார்.
ஆண்கள் வார்டில் அவரை பரிசோதித்த மருத்துவர், அவரது வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படவே அதிர்ச்சியடைந்தார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில், வலியால் துடித்த அவரை உடனே பிரசவ வார்டுக்கு அனுப்பி வைத்தார்.
தாடி, மீசையுடன் ஒருவர் பிரசவ வார்டுக்குள் நுழைந்ததைப் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவரது வயிற்றில் குழந்தை இருந்தது உறுதிசெய்யப்பட்டது. ஆச்சரியம் தாங்க முடியாமல் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டன. பிறகு அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கத்தில், பெண்ணாக பிறந்த அந்த நபர் ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆண்களைப் போலவே வாழ்ந்து வந்துள்ளார் என்றும், தாடி, மீசை வளர்ந்ததற்கு காரணமும் அதுதான் என்றும் கூறினர்.
அவர் மனதளவில் ஆணாக இருந்தாலும் உடல் அளவில் ஒரு பெண் தான் என்பதால், அறிவியல் ரீதியாக அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தது என மருத்துவர்கள் விளக்கமளித்தனர். எனினும், குழந்தைக்கு அவர் பால் எதுவும் கொடுக்க முடியாத நிலை இருப்பதால், தற்போதைக்கு மருத்துவமனை குழந்தையை கவனித்து வருகிறது.
தான் அந்த குழந்தையை வளர்க்க விரும்ப வில்லை என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றும் அவரது அடையாள அட்டையை பார்க்கும் போது அவர் ஆண் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட மறுத்து விட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஜாலியா பேசிகிட்டு இருந்த காதலர்கள்'... 'திடீரென கதறிய காதலி, பறந்த குடை'... 'பீச்'சில் நடந்த கொடூரம்!
- “காணாம போன அந்த ஆயிரக் கணக்கான பேருக்கும் நடந்தது இதான்!”.. உலுக்கிய கோத்தபய ராஜபக்சேவின் அறிக்கை!
- இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச-யின் இணைப்புச் செயலாளராக செந்தில் தொண்டமான் நியமனம்..!
- அவரே சுத்தி பாத்துட்டு போய்டுவாரு... யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க... 'யானைக்கு' ஸ்டார் ஹோட்டல் ஊழியர்கள் செய்த மரியாதை....
- 'கேன்சல்' பண்றதுக்கு முன்னாடியே... மைதானத்தை விட்டு 'வேகமாக' வெளியேறிய வீரர்கள்... உடைந்த ரகசியம்!
- நொடிகளில் ‘100 அடி’ பள்ளத்திற்குள் ‘கவிழ்ந்த’ பேருந்து... பயங்கர விபத்தில் சிக்கி ‘12 பேர்’ பலி... ‘40க்கும்’ மேற்பட்டோர் ‘படுகாயம்’...
- ‘முழுசா எதுவும் தெரியாம’... ‘பொறுப்பு இல்லாமல் பேசக் கூடாது’... CAA குறித்து... விராட் கோலியின் அதிரடி பதில்!
- ‘ராணுவத்தில் மேஜர் பதவி’!.. பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!
- ‘விக்கெட்’ எடுக்கலன்னா என்ன... பந்து கிடைத்தும் ‘ரன் அவுட்’ ஆக்காமல்... இதயங்களை ‘வென்ற வீரர்’...
- ‘கவர்னராகும் முத்தையா முரளிதரன்?’... ‘அழைப்பு விடுத்த இலங்கை அதிபர்’... விவரம் உள்ளே!