மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை..! உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

துருக்கியில் மத போதகர் ஒருவருக்கு 8,658 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம். இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 1165 கிமீ தூரமா.?.. "வாரோம் சாமி சன்னிதானம்".. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 33 ஆண்டுகளாக பாத யாத்திரை..

துருக்கி நாட்டை சேர்ந்தவர் அட்னான் அக்தார். 66 வயதான இவர் அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி வந்திருக்கிறார். பழமைவாத கொள்கைகளை போதிக்கும் இந்த நிகழ்ச்சி துருக்கியின் மத போதகர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சிகளில் பெண்களுடன் இவர் தோன்றுவது, மக்களிடையே விமர்சனங்களையும் ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. மேலும், இது பொதுமக்களின் நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து, ராணுவ மற்றும் அரசியல் ரகசியங்களை இவர் வெளியிட்டதாகவும், ஆயுதங்களை கொண்ட குழுவுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அக்தார் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டார்.

இந்த விசாரணையில் கடந்த 2021 ஆம் ஆண்டு துருக்கி கீழவை நீதிமன்றம் இவருக்கு 1,075 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இது துருக்கியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள உயர் குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் அக்தார்.

மேலவை நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று (நவம்பர் 16) இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதிகள் அளித்திருக்கின்றனர். அதில், பாலியல் குற்றங்கள், அரசியல் மற்றும் ராணுவ விவகாரங்களை வெளியே தெரிவித்தது ஆகிய குற்றங்களுக்காக அக்தாருக்கு 8,658 வருடங்கள் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கும் தலா 8,568 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம்.

தொலைக்காட்சிகளில் நிகழ்சிகளை நடத்தி வந்த போதகருக்கு 8,658 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் உலக அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Also Read | விடாமுயற்சியுடன் போராடிய பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்.. உதவி ஆட்சியராக தேர்வாகி அசத்தல்.!

ISTANBUL, ISTANBUL COURT, PRISON, TV PREACHER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்