10 நாட்களாக தூங்காமல் உழைத்த 'சீன மருத்துவர்'... திடீரென எதிர்பாராமல் நேர்ந்த துயரம்... 'ரியல் ஹீரோவுக்கு' சல்யூட் அடித்த சீன மக்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து 10 நாட்களாக ஓய்வு, உரக்கமின்றி சிகிச்சையளித்து வந்த மருத்துவர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சீன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 28.
சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரசால் இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 28 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆங்காங்கே தனி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஓய்வின்றி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் வுகான் நகரில் கடந்த 10 நாட்களாக, ஓய்வு உறக்கமின்றி நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, சாங் யிங்கீ என்ற, 28 வயதான இளம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
நோயாளிகளைக் காக்க ஓய்வு உறக்கம் இன்றி பணியாற்றியதே அவரது இறப்புக்குக் காரணம் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் தான் மக்களின் உண்மையான ஹீரோ எனப் புகழ்ந்து பாராட்டி, சீன மக்கள் அனைவரும், அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘திருநள்ளாறு கோவிலுக்கு’... ‘குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு’... ‘திரும்பிய வழியில் நடந்தேறிய பயங்கரம்’!
- "முருகா, கந்தா, கடம்பா... என்னைய மட்டும் காப்பாத்து..." "ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல..." "12 மாஸ்க் போட்டிருக்கேன்..." "கொரோனா கிட்ட கூட வரக்கூடாது..." 'வைரல் வீடியோ'...
- 'கொரோனா' பேய் தாக்கிய கப்பல்... நடுக்கடலில் தத்தளிக்கும் '3700 பேர்'... மேலும் 10 பேருக்கு 'வைரஸ்' தாக்குதல்...
- 'ஐரோப்பாவிலும்' பரவுது புதுவித காய்ச்சல்... 'ஃபிரான்சில்' மட்டும் 26 பேர் பலி... 'மறைக்கும்' உலக நாடுகள்...
- ‘சீனாவில் தவிக்கும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க’... ‘உதவிக்கரம் நீட்டப்படுமா?’... ‘இந்தியா கொடுத்த அதிரடி பதில்’!
- ‘அத்தனை பேரும் தேவதைங்க!’.. ‘மாஸ்க் இல்லாத சீன செவிலியர்கள்’.. கண் கலங்கவைக்கும் புகைப்படங்கள்!
- ‘கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு’... ‘மருத்து கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனம்’... ‘சீனாவில் நோயாளிகளிடம் பரிசோதிக்க திட்டம்’!
- 'முதுமையில் தாக்கிய கொரோனா வைரஸ்’... ‘ஐசியூவில் பரிவுடன் கலந்த’... ‘கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்’... ‘இதயத்தை உருக்கும் வீடியோ’!
- 'இளம் மருத்துவருக்கே இந்த நிலைமையா'... 'எதிர்பாராமல் நேர்ந்த துயரம்'... கலங்கி நிற்கும் உறவுகள்!
- 'ஃபிரீசர்' இறைச்சி 'ஜாக்கிரதை'... 'கொரோனாவின்' வசிப்பிடம் இதுவாகக் கூட இருக்கலாம்... 'சீனாவில்' படித்த 'திருப்பூர் மாணவர்' தகவல்...