'10 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... 'நிலைகுலைந்த அமெரிக்கா...' ' நேற்று 'ஒரு நாளில்' மட்டும் '1,255 பேர்' பலி...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 1255 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலககின் 202 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 13 லட்சத்து 46 ஆயிரத்து 36 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 654  பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 4 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 331 பேர் புதிதாக வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆயிரத்து  671 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். 8 ஆயிரத்து 879 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை அமெரிக்காவில் 10 ஆயிரத்து 871 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 255 பேர் வரை உயிரிழந்துள்ளதால் அந்நாடு நிலைகுலைந்து போயுள்ளது.

இதனால் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா உள்ளது.

இதுவரை நாடுகள் வாரியாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்த விவரங்கள்...

அமெரிக்கா - 10,871

ஸ்பெயின் - 13,341

இத்தாலி - 16,523

ஜெர்மனி - 1,810

பிரான்ஸ் - 8,911

சீனா - 3,331

ஈரான் - 3,739

இங்கிலாந்து - 5,373

துருக்கி - 649

சுவிஸ்சர்லாந்து - 765

பெல்ஜியம் - 1,632

நெதர்லாந்து - 1,867

கனடா - 323

இந்தியா - 136

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்