"என் சோக கதையை கேளுங்க'.. கஷ்டப்படுத்திய போனை Frame செய்து மாட்டிய கஸ்டமர்..
முகப்பு > செய்திகள் > உலகம்சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடல் போனால் ஏற்பட்ட அனுபவத்தை வாடிக்கையாளர் ஒருவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வாங்கி நான் பட்ட கஷ்டம் என்ற வாக்கில் அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது பதிவில் உடைந்து போன கேலக்ஸி Z ஃப்ளிப் 3 போனை ஃபிரேம் செய்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
வைரல் புகைப்படத்தின் படி, ஃபிரேம் ஒன்றில் உடைந்த நிலையில் உள்ள வாடிக்கையாளரின் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மற்றும் வாரண்டியில் அந்த போனை சரி செய்ய முடியாது என சாம்சங் கொடுத்த கடிதம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தான், இனி சாம்சங் சாதனம் எதையும் வாங்க போவதில்லை என தெரிவித்துள்ளார். போன் வாங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
இந்த வாடிக்கையாளரின் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடல் ஸ்கிரீனின் மத்தியில் கருப்பு நிறத்திற்கு மாறியது. பின் ஒருபக்க ஸ்கிரீன் தொடுதிரை வேலை செய்யமால் போனது. போனினை தான் கீழே போடவே இல்லை என அந்த வாடிக்கையாளர் அடித்துக் கூறுகிறார். மேலும் போனிற்கு வாரண்டி இருந்ததால், அதனை சரி செய்ய அவர் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 மாடலை சரிவீஸ் செண்டர் கொண்டு சென்றார்.
அப்போது, "சாதனம் வாரண்டியின் கீழ் சரி செய்யப்பட மாட்டாது. நீங்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில், ஸ்மார்ட்போனினை சரிசெய்யும் வல்லுனர்குழுவுக்கு அனுப்பினோம். ஆய்வில் போனின் டிஸ்ப்ளே மட்டுமின்றி ஃபிரேம் உடைந்து இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. போன் கீழே விழுந்து, அளவுக்கு மீறிய அழுத்தம் அல்லது வளைக்கப்பட்டு இருத்தல் போன்ற காரணிகளால் உடைந்து இருக்கும் " என்றும் சாம்சங் பதில் அளித்துள்ளது. அதனோடு, உடைந்த ஸ்மார்ட்போனை சரி செய்ய 340 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 25,609 வரை செலவாகும் என சாம்சங் தெரிவித்து இருக்கிறது.
இதனால் உடைந்து போன ஸ்மார்ட்போனை சரி செய்ய சாம்சங்கிற்காக ஒரு பைசா கூட செலவு செய்ய முடியாது என முடிவு செய்து உடைந்த போன் மற்றும் சாம்சங் அளித்த பதில் ஆகியவற்றை நினைத்து நொந்து போன வாடிக்கையாளர் அந்த போனை ஃபிரேம் செய்து வைத்துள்ளார். மேலும் சாம்சங் நிறுவனம் சார்பாக முறையான விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
இந்த ட்விஸ்ட்டை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலயே.. சிஎஸ்கே தனி.. மும்பை தனி.. வெளியானது ஐபிஎல் அட்டவணை..!
தொடர்புடைய செய்திகள்
- "போர்ல எங்களோட நிக்க யாருமே இல்ல.. தனியா நிக்குறோம்!".. உக்ரைன் அதிபரின் நெஞ்சை பிழியும் பேச்சு
- "கேக்க மாட்டீங்க".. மாணவர்களின் செல்போன்களை நெருப்பில் பொசுக்கிய ஆசிரியர்.. காட்டுத்தீயாக பரவும் வீடியோ..!
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- எண்ட் கார்டு போட்டு எகத்தாளமாடா பண்றீங்க.. எனக்கு எண்டே கிடையாது.. ட்ரம்ப் செய்த தரமான சம்பவம்!
- UPI மூலம் பணம் செலுத்துபவரா.. இதையும் கொஞ்சம் தெரிஞ்சுகோங்க.. இல்லைனா பணம் காலி!
- ஒரு காதல் கடிதத்தில் எத்தனை ஆச்சர்யம்.. கார்டூனிஸ்ட் கலைஞர் மனைவிக்கு எழுதிய கடிதம்.. இதுவும் கடந்து போகும்!
- "மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ஸ்மார்ட் சிட்டி என்றழைக்க முடியுமா?" மநீம தலைவர் கமல்ஹாசன் ஆவேசம்
- பாத்ரூம் போக வேண்டிய இடமாயா அது.. கொஞ்சம் விட்டால் மொத்த பேரும் பரலோகம் போய் இருப்பாங்க!
- போடு.. கல்யாண பத்திரிகை தமிழ்'லயா.. பிரபல ஆஸி வீரர் கரம் பிடிக்கும் பெண் யார்னு பாருங்க..
- இந்தியாவில்.. உலகின் உயரமான பாலம்.. "ஏதோ வெளிநாடு மாதிரி இருக்கே.." மெய்மறந்த நெட்டிசன்கள்.. வைரலாகும் புகைப்படம்