அரிய புற்றுநோய் ஒரு பக்கம்.... இந்த இடத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா.. அதிர்ந்த அமெரிக்க பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட கேமரூன் நியூஸோம் என்ற பெண்ணுக்கு நாக்கில் முடி வளரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்தைச் சேர்ந்தவர் கேமரூன் நியூஸோம் (42). ஒரு குழந்தைக்கு தாயான இவர் வினோத புற்று நோயால் பாதிக்கப்ட்டிருந்தார். இதை,  செதிள் செல் கார்சினோமா என்ற நாக்குடன் தொடர்புடைய அரிய வகை புற்றுநோயை கண்டறியவே மிக சிரமத்திற்கு ஆளாகினார்.

இந்த அரிதான புற்றுநோயால் இவரால் சாப்பிடவோ, பேசவோ இயலாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். புற்றுநோய் என கண்டறிவதற்கு முன்பு சாதாரணமாக ஆண்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் கொடுத்தனர். இதனால் எந்த பலனும் அளிக்கவில்லை. கடந்த 2013ம் ஆண்டு காது, மூக்கு, தொண்டைக்கு பார்க்கும் சிறப்பு மருத்துவரை கேமரூன் நியூஸோம் அணுகிய போது அவருக்கு ஏற்பட்டிருப்பது அரிதான தோல் புற்றுநோய் என கண்டறியப்பட்டது.

புற்றுநோயால் மனம் கலங்கி நியூஸோம் பின்பு நோயை எதிர்த்து போராட ஆரம்பித்தார். பின்பு அவருக்கு, கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு நாக்கில்  புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக அவரது தொடைப் பகுதியின் தோல் நாக்கில் வைத்து தைக்கப்பட்டது.

என்ன ஒரு புத்திசாலித்தனம்.. கூகுள் பே மூலம் வழிபறி.. நவீன டெக்னாலஜி திருடர்களுக்கு மறக்க முடியாத பரிசு

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ரேடியோ தெரபி, கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு எப்படி சாப்பிடுவது, பேசுவது தொடர்பாக மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இந்நிலையில், புற்றுநோயில் இருந்து மீண்ட கேமரூன் நியூஸோன் கூறியதாவது, "புற்றுநோயில் இருந்து பூரணமாக குணமடைந்து விட்டேன். என் வயது பெண்களுக்கு இதுபோன்ற சவால்களை எவ்வாறு ஏற்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நான் இருப்பேன்" என்று தெரிவித்தார்.

ஆனால் எனது நாக்கின் ஒரு பகுதியில் உணர்வு இல்லாமல் இருப்பதை நான் அறிகிறேன். ஒரு நாள் கண்ணாடியில் எனது நாக்கை பார்த்தபோது, கால் திசுக்கள் மாற்றப்பட்ட பகுதியில் முடி வளர்ந்து வருவதை அறிந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு பேருந்து பயணம் இனி இனிமையாகும்.. அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்ட அதிரடி உத்தரவு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்