இரவில் 'ஷார்ட் சர்க்யூட்டால்' வீட்டில் பற்றிய 'தீ'... அசந்து தூங்கிய குழந்தை, மற்றும் 'குடும்பத்தினர்'... விழித்துக் கொண்டிருந்த சிறுவன் 'நோவா'... "என்ன செய்தான் தெரியுமா?..."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் நோவா, இரவில் ஷார்ட் சர்க்யூட்டால் வீடு பற்றி எரிந்த போது, பயந்து விடாமல் தனது 2 வயது தங்கை, நாய்க்குட்டி மற்றும் குடும்பத்தினரை ஒருவர் பின் ஒருவராக காப்பாற்றி வெளியே கூட்டி வந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பர்டோவ் கவுன்ட்டி பகுதியைச் சேர்ந்த 5வயது சிறுவன் நோவா வுட்ஸ் (Noah woods). இந்த சிறுவன் தனது தீரமிக்க செயலால் தற்போது பிரபலமாகி விட்டான்.

வீடு தீப்பற்றி எரியும் போது ஒரு குழந்தை என்ன செய்யும். பயத்தில் அலறியடித்துக் கொண்டு கூச்சலிடும். ஆனால் நோவா செய்த செயல் சற்று வித்தியாசமானது. தீப்பிழம்புகளைக் கண்டு அஞ்சாமல், தன் இரண்டு வயது சகோதரி மற்றும் தங்கள் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாயை ஜன்னல் வழியே வெளியே பத்திரமாகக் கொண்டுபோய் விட்டுள்ளான். அதன் பின்னர் உறங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரை எழுப்பி அனைவரையும் காப்பாற்றியுள்ளான். அவர்களுக்கு சிறிய அளவிலான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

நோவா எழுப்பவில்லை என்றால் நாங்கள் அனைவரும் தீயில் மாட்டிக் கொண்டிருப்போம் என அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். நோவாவின் இந்த தீரச்செயலைப் பாராட்டி ' எங்கள் ஹீரோ' என தலைப்பிட்டு பார்டோவ் தீயணைப்புத்துறையினர் இந்த செய்தியை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் சிறுவன் நோவாவின் இந்தச் செயலைப் பாராட்டி, லைஃப் சேவிங் அவார்டையும் அம்மாகாண தீயணைப்புத் துறையினர் வழங்கியுள்ளனர்.

NOAH, AMERICA, BURNED HOUSE, SHORT CIRCUIT, SAVE FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்