'செயற்கை கால்களோடு நடந்து...' 'தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக...' 2.74 கோடி ரூபாய் நிதி திரட்டிய சிறுவன்....!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டனில் பெற்றோர்களால் நிகழ்ந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட சிறுவன் தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு சுமார் 2 கோடிக்கு மேல் நிதி திரட்டி கொடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertising
Advertising

லண்டனை சேர்ந்த டோனி ஹெட்கெல் என்ற சிறுவன் குழந்தையாக இருந்தபோது வீட்டில் நடந்த பிரச்சனையில் பெற்றோர் ஏற்படுத்திய காயத்தால் அவருடைய இரண்டு கால்களையும் அகற்றியுள்ளனர். தற்போது அவர் செயற்கைக் கால்களின் உதவியுடன் செயல்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தனது வளர்ப்பு பெற்றோர்களுடன் வாழ்ந்து வரும் டோனி சிறுவயதில் தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு உதவ நினைத்துள்ளார். இதற்கு காரணம் இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற கேப்டன் டாம் மூர், கொரோனா களத்தில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்காக தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் குறித்து அறிந்த அவர் தானும் இப்படி செய்ய வேண்டும் என ஊக்கம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தனது உயிரை காப்பாற்றிய லண்டன் எவெலினா குழந்தைகள் மருத்துவமனைக்கு, தன் செயற்கைக் கால்களின் உதவியுடனும், ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோமீட்டர் நடந்து 500 யூரோக்கள் அதாவது 42,800 ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளார். டோனியின் முயற்சியை பார்த்த மக்கள் அவரை உற்சாகம் ஊட்டும் வகையில் டோனியின் அறக்கட்டளைக்கு இதுவரை 2.74 கோடி ரூபாய் நன்கொடை அனுப்பியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்