எதே... 60 வருஷமா தூங்கலையா?... 80 வயசு தாத்தாவின் விநோத சிக்கல்.. இது எப்படிங்க சாத்தியம்?
முகப்பு > செய்திகள் > உலகம்வியட்நாம் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 60 வருடங்களாக தூங்குவதே இல்லை என வெளியான தகவல் பலரது உறக்கத்தையும் பாதித்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | துருக்கி பூகம்பம்.. இடிபாடுகளில் சிக்கிய இளைஞர்.. உயிரை காப்பாத்திய வாட்சப் ஸ்டேட்டஸ்..!
பொதுவாக நாம் மருத்துவரிடம் உடல் நல பரிசோதனைக்காக செல்லும்போது அவர் நம்மிடம் சொல்லும் முக்கியமான விஷயம் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு உடல் அளவிலும் மன அளவிலும் தூக்கம் மனிதருக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தூக்கமின்மை பல்வேறு உளவியல் சிக்கல்களுக்கும் காரணமாக அமைந்துவிடும் என தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனால் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இயற்கையின் இந்த கட்டுப்பாடுகளுக்கு விதிவிலக்காக திகழ்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
வியட்நாம் நாட்டை சேர்ந்தவர் தாய் என்கோக் (Thai Ngoc). அங்குள்ள மலைப் பகுதியில் குடும்பத்தினருடன் விவசாய பணிகளில் தாய் ஈடுபட்டு வருகிறார். தினந்தோறும் பல கிலோ மீட்டர்கள் மலைப் பகுதியில் சாதாரணமாக நடந்து சென்று பணிகளை மேற்கொள்ளும் தாய் கடந்த 1973 ஆம் ஆண்டுக்குப் பிறகு தூங்கவே இல்லை என அவரது மனைவி சொல்கிறார். இப்போது மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாகவே வியட்நாம் ஊடகங்களில் தாய் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் பேட்டி எடுக்கவும் சென்றதாக தெரிகிறது. அப்போது அவருடைய முழு நாள் வேலையையும் படக் குழுவினர் கண்காணித்திருக்கின்றனர். இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வியட்நாம் ஊடகங்களில் வெளிவருவதுண்டு. இருப்பினும் இந்த வயதான நபருடைய சிக்கலுக்கு என்னதான் காரணம்? என்பதற்கு இன்று வரை பதில் கிடைக்காமல் அவரது குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
ஏற்கனவே பலமுறை அவருக்கு உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அப்போது அவர் பரிபூரண நலத்துடன் இருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாகவும் சொல்கிறார் அவருடைய மனைவி. தினந்தோறும் மலைப் பகுதியில் கடுமையான வேலைகளை செய்த போதிலும் தாய்க்கு தூக்கமும் வருவதில்லை என சொல்லப்படுகிறது. தாய்க்கு இதுவரையில் வேறு எந்த உடல் சிக்கலும் வரவில்லை என அவருடைய மனைவி கூறியுள்ளார். ஆனால் கடந்த 1962 இல் அவருக்கு ஒரு வித காய்ச்சல் ஏற்பட்டதாகவும் ஒருவேளை அதன் காரணமாக இந்த ஏற்பட்டிருக்கலாம் எனவும் தான் சந்தேகிப்பதாக கூறுகிறார் அவர். ஆனால் முதியவர் தாயின் இந்த சூழ்நிலைக்கான உண்மையான காரணம் இந்த நேரம் வரையில் மர்மமாகவே இருந்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கி உள்ளன.
Also Read | "இன்டர்நேஷனல் மேட்ச்ல கூட இப்டி நடந்ததில்ல போலயே".. சச்சினையே மிரள வெச்ச ஃபீல்டர்.. வைரல் வீடியோ!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 30 நிமிஷம்.. கடற்கரை வெயிலில் தூங்கிய பெண்.. "எந்திரிச்சு கண்ணாடி'ல மூஞ்ச பாத்ததுக்கு அப்புறம்".. ஒரு கணம் அப்படியே ஆடி போய்ட்டாங்க
- 37,000 அடிக்கு மேல பறந்த 'விமானம்'.. தூங்கிய விமானிகள்.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
- உடைந்து கிடந்த வீட்டின் கதவு.. பதறி போன உரிமையாளர்.. "என்னடான்னு போய் பாத்தா.. உள்ள இருந்து குறட்டை சத்தம் வந்துருக்கு.."
- "Daily நீங்க Office'லயே தூங்கலாம்.." சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்.. "சீக்கிரம் அந்த Address'அ குடுங்கப்பா.."
- மனசுக்குள் இருந்த ரகசியம்.. தூக்கத்தில் உளறி கொட்டிய மனைவி.. கேட்ட உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு தெறித்து ஓடிய கணவன்
- இனி 'அம்பயர்கள்' நிம்மதியா தூங்குவாங்க...! அவரு 'செஞ்ச காரியம்' கோப்பைய ஜெயிக்குறத விட பெருசு...! - கோலியை நினைத்து உருகிய வீரர்...!
- தூங்க ஆரம்பிச்சுட்டாருன்னா எழுப்பறது ரொம்ப கஷ்டம்.. குறைஞ்சது 25 நாளாவது ஆகும்.. ‘விநோத’ நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்..!
- 'இப்படியே படுத்து தூங்கிட்டு இருந்தா...' எப்போ 'வாழ்க்கையில' முன்னேறி 'செட்டில்' ஆகுறது...? இந்த கேள்விய இனிமேல் கேட்க முடியாத அளவுக்கு 'அட்டகாசமான' அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்...!
- 'திருட வந்த எடத்துல...' 'ஏசி ரிமோட்டை கண்டதும் திருடர் எடுத்த முடிவு...' 'ஆஹா செமையா வந்து சிக்கிட்டோமே...' - கடைசில தான் மொரட்டு ட்விஸ்ட்...!
- 'இரவு விழித்திருந்து வேலை செய்வதில் இத்தனை நன்மைகளா!... 'ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள்'...