'அந்த பிஞ்சுகளுக்கு எதுவும் ஆக கூடாது'...'நெக்ஸ்ட் லெவலுக்கு போன மருத்துவமனை'...குவியும் பாராட்டு!
முகப்பு > செய்திகள் > உலகம்புதிதாக இந்த உலகத்திற்கு வரும் பிஞ்சு குழந்தைகளுக்கு கொரோனாவால் எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதற்காக, குழந்தைகளுக்கென பிரத்யேக மாஸ்க்களை தயாரித்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ செய்துள்ளது.
உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பலரும் தங்களை பாதுகாத்து கொள்ள பல்வேறு விதமான முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.
அந்த வகையில் தாய்லாந்தில் உள்ள சமுத் பிராகர்ன் மாகாணத்தில் அமைந்திருக்கும் பவோலோ மருத்துவமனையில் (Paolo Hospital), புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கென்று பிரத்யேக மாஸ்க்களை தயாரித்துள்ளது. பச்சிளம் குழந்தைகளுக்கென பிரத்யேக தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாஸ்க்களை அந்த குழந்தைகளுக்கு அணிவிப்பதன் மூலம், கொரோனா தொற்றிலிருந்து பிஞ்சு குழந்தைகளை பாதுகாக்க முடியும் என, அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பவோலோ மருத்துவமனை, ''எங்கள் மருத்துவமனையில் பிறந்திருக்கும் இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு. சோ கியூட்'' என சில புகைப்படங்களை மருத்துவமனை பகிர்ந்துள்ளது.
இதற்கிடையே மருத்துவமனையின் இந்த பதிவிற்கு லைக்ஸ்களும் ஷேர்களும் குவிந்து வருகின்றன. பலரும் மருத்துவமனையை பாராட்டி வருகிறார்கள். இதனிடையே கொரோனா பரவாமல் தடுக்க, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை தாய்லாந்து அரசு அமல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிலைமை இப்போ கொஞ்சம் 'ஓகே' தான்' ... ஆனாலும் பாம்பு பண்ணைக்கு நோ ... சீனாவில் தவிக்கும் 'பாம்பு கிராமம்'!
- அடுத்தடுத்த சிக்கல்களால் கதிகலங்கும் அமெரிக்கா!... போர்க்கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா!... நெருக்கடியில் கடற்படை தலைவர் அதிர்ச்சி முடிவு!
- ‘கட்டிப்பிடிச்சு கூட அழ முடியாது’!.. கொரோனா வைரஸ் தாக்கி இறந்தவர்களின் இறுதிசடங்கு இப்படி தான் நடக்கும்..!
- 'கொரோனாவால்' வருமானத்தை இழந்து நின்ற 'நண்பர்களை'... மகிழ்ச்சியின் 'உச்சத்திற்கு' கொண்டு சென்ற 'ஜாக்பாட்!'...
- ‘10-ம் வகுப்பு தேர்வு எதற்காக ரத்து செய்யப்படவில்லை’... ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்’!
- 'பொழப்புக்காக இங்க வந்து டாக்சி ஓட்டுறாங்க'...'நொறுங்கிய 'அமெரிக்கா'... இந்தியர்களுக்கு நேர்ந்த கோரம்!
- 'கொரோனா வார்டுக்குள் நடந்த பாலியல் வன்கொடுமை...' 'சிசிடிவி செக் பண்ணி பார்த்தப்போ...' 'கருக்கலைப்பு செய்திருந்த பெண்ணை...' அதிர வைக்கும் கொடூரம்...!
- ‘ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு’!.. இந்தியாவில் முதல் மாநிலமாக அறிவித்த அரசு..!
- நியூயார்க்கை 'நிலைகுலைய' வைத்துள்ள கொரோனா... 'சீனாவிலிருந்து' பரவியதல்ல... ஆய்வில் வெளியாகியுள்ள 'புதிய' தகவல்...
- 'அண்ணா பல்கலைக்கழகம்' முதல் 'பத்தாம் வகுப்பு' வரை!... தேர்வுகள் எப்போது?... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!