லாட்டரியில் ஜாக்பாட்.. துள்ளிக்குதித்து கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய்லாந்தில் லாட்டரியில் ஜாக்பாட்டை வென்ற உடனேயே மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

                                 Images are subject to © copyright to their respective owners.

Also Read |  "T20 போட்டிகளில் இனிமே விராட் கோலி விளையாடாம இருக்கணும்".. ஷோயப் அக்தரின் அட்வைஸ்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா?

லாட்டரி

உலகின் பல நாடுகளில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க விரும்பும் நபர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என யார்தான் சொல்லி விட முடியும்? ஒரே லாட்டரி டிக்கெட் மூலம் திடீரென பெரும் பணக்காரர்களான நபர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் லாட்டரியில் ஜாக்பாட் வெல்லும் சிலருக்கு மொத்த வாழ்க்கையும் மாறிப்போய்விடும். அப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் தாய்லாந்திலும் நடந்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

மனைவிக்கு ஜாக்பாட்

தாய்லாந்தில் உள்ள இசான் பகுதியை சேர்ந்தவர் நரீன். இவருடைய வயது 47. இவருடைய மனைவி சவீவான். (வயது 43). இருவருக்கும் திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன. நரீன் வேலை விஷயமாக தென் கொரியாவிற்கு சென்றிருக்கிறார். அவ்வப்போது மனைவிக்கும் தனது ஊதியத்தின் ஒரு தொகையை அனுப்பியும் வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சவீவான் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 3 லட்சம் பவுண்டுகள் பரிசாக கிடைத்திருக்கிறது. இதனை தனது கணவருக்கு சவீவான் தெரியப்படுத்தவில்லை.

அதிர்ச்சி

இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி நாடு திரும்பியிருக்கிறார் நரீன். அப்போது தான் தனது மனைவிக்கு லாட்டரியில் ஜாக்பாட் தொகை கிடைத்திருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது. மேலும், அவர் ரகசியமாக வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டதையும் அவர் அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் நரீன்.

Images are subject to © copyright to their respective owners.

இதுபற்றி நரீன் பேசுகையில்," கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நான் தென்கொரியாவில் இருந்து மனைவிக்கு போன் பேசினேன். அப்போது, தான் பிரிந்து செல்வதாக மனைவி கூறினாள். பின்னர் மார்ச் 3 ஆம் தேதி வீடு திரும்பியதும் தான் அவருக்கு ஜாக்பாட் விழுந்திருப்பதும், வேறு ஒருவரை ரகசியமாக திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது. ஊதியத்தின் பெரும் தொகையை அவருக்கு நான் அனுப்பி இருக்கிறேன். என்னுடைய வங்கி கணக்கில் இப்போது சொற்பமான தொகை மட்டுமே இருக்கிறது. ஆகவே அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறேன். அவருடைய ஜாக்பாட் தொகையில் பாதியை தனக்கு வழங்கிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருக்கிறேன்" என்றார்.

இந்த சூழ்நிலையில், தானும் நரீனும் சமீப ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் இது அக்கம் பக்கத்தினர் அனைவர்க்கும் தெரியும் எனவும் இதுதொடர்பாக சட்ட ரீதியான போராட்டத்தை சந்திக்க தயாராக இருப்பதாகவும் சவீவான் தெரிவித்திருக்கிறார்.

Also Read | சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதிய அவதாரம்.. BCCI பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

THAILAND WOMAN, HUSBAND, JACKPOT, LOTTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்