'திருட வந்த எடத்துல...' 'ஏசி ரிமோட்டை கண்டதும் திருடர் எடுத்த முடிவு...' 'ஆஹா செமையா வந்து சிக்கிட்டோமே...' - கடைசில தான் மொரட்டு ட்விஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய்லாந்தில் திருட சென்ற இளைஞர் செய்த காரியம் அவரின் திருட்டு தொழிலுக்கே ஆப்பு வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் அதித் கின் குந்துத் என்ற 22 வயது இளைஞர் திருட்டு தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் எப்போதும் போல் இரவு 2 மணியளவில் உரிமையாளருக்கு தெரியாமல், வீட்டு கதவை சத்தமின்றி உடைத்து இறங்கிய அதித் அங்கிருந்த பொருட்களை எல்லாம் பார்த்து அசுரவேட்கைக்கு தயாராகியுள்ளார்

சோர்வாக இருந்த அதித், ஏசி ரிமோட்டை பார்த்த பிறகு அங்கேயே சிறிது நேரம் இருந்துள்ளார். அதன்பின் என்ன யோசித்தாரோ என்னவோ உடனடியாக ஏசியை ஆன் செய்து அங்கேயே தூங்கியுள்ளார்.

                            

வீட்டின் உரிமையாளர் எழுந்திருப்பதற்கு முன்பு சென்றுவிடலாம் என படுத்த அதித், நன்கு படுத்து உறங்கியிருக்கிறார். காலையில் எழுந்த வீட்டின் உரிமையாளர் மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் ஏசி ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, யாரோ அடையாளம் தெரியாத நபர் வசதியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார்.

பார்த்த நபர் வேறுயாரும் இல்லை விசியான் பூரி மாவட்ட காவல் அதிகாரி ஜியாம் ப்ரசெர்ட்டின் ஆவார். படுத்துகொண்டிருந்த திருடனை கண்ட காவல் அதிகாரி ஜியாம் மற்ற காவலர்களை அழைத்திருக்கிறார்.

                       

ஏதோ சத்தம் கேட்பதுபோல எழுந்த அதித்தை சுற்றி அந்த அறைமுழுவதும் காவலர்களால் நிறைந்திருந்துள்ளனர். இதனைக் கண்டு குழப்பமடைந்த அதித்திற்கு இப்போது தான் தெரிந்துள்ளது தான் வந்தது காவல்துறை அதிகாரி வீடு என்று.

மேலும் அதித்தை கைதுசெய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல் ஆந்திராவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  நடந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்