"என்னங்க இது தொண்டை'ல??.." துடிதுடித்த மீனவர்.. எக்ஸ் ரே எடுத்து பார்த்து ஆடிப் போன மருத்துவர்கள்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மீனவர் ஒருவர், விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரின் நிலையைக் கண்ட மருத்துவர்கள், ஒரு நிமிடம் அதிர்ந்து போன சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "இங்க என்னங்க பண்றீங்க??.." ரெயில் நிலையத்தில் என்ட்ரி கொடுத்த அழையா விருந்தாளி.. திடீரென உருவான பதற்றம்

தாய்லாந்து பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், வாயைத் திறந்த போது, நீரில் இருந்த மீன் ஒன்று, வெளியே துள்ளிக் குதித்த படி, நேராக அந்த மீனவரின் வாய் வழியாக தொண்டைக்குள் சென்று சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அந்த மீனவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர்.

துடிதுடித்த மீனவர்

Anabas வகையை சேர்ந்த மீன் ஒன்று, நீரில் இருந்து குதித்து, மீனவரின் தொண்டையில் சிக்கியது மட்டுமில்லாமல், அவரின் மூக்கு வழியாக தப்பிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அந்த நபரின் தொண்டை மற்றும் மூக்குப் பகுதிக்குள் அந்த மீன் சிக்கிக் கொள்ள, வலியால் துடிதுடித்துள்ளார் அந்த மீனவர்.

குழம்பி போன மருத்துவர்கள்

தொடர்ந்து, மருத்துவமனை சென்ற அவரது நிலையைக் கண்ட மீனவர்கள், ஒரு நிமிடம் குழம்பி போயினர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது, சுமார் ஐந்து அங்குலத்தில் கூர்மையான மீன் இருப்பது தெரிந்தது. இதன் பின்னர், அந்த மீனவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட, மிகவும் கவனமாக அந்த மீனை அவரது தொண்டையில் இருந்து மருத்துவர்கள் அகற்றினர்.

அதே போல, கூர்மை வாய்ந்த மீன் என்பதால், மீனவரின் உடலுக்குள் சற்று சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அகற்றப்பட்ட மீன் முழுவதும், அவரின் ரத்தமும் நிறைந்தபடி இருந்துள்ளது. தற்போது அந்த மீனவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை என அங்கிருந்த மருத்துவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த விபத்து நிகழ்வதற்கு சற்று முன்பு, Harpoon (மீன் பிடிக்க உதவும் கருவி) மூலம், தண்ணீரில் மின் பிடித்த படி, அந்த மீனவர் நின்றுள்ளார். அப்போது தான், அவர் சரியாக வாயை திறந்த நேரத்தில், தண்ணீரில் இருந்து குதித்த Anabas மீன், தொண்டைக்குள் சிக்கி சிக்கலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | கர்ப்பமா இருக்குறப்போவே திரும்பவும் கர்ப்பம்.. அமெரிக்க பெண்ணுக்கு நடந்த அதிசயம்.. பின்னணி என்ன??

THAILAND FISH, MAN THROAT, மீனவர், மருத்துவர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்