"குரங்கு அம்மை இருக்குன்னு தெரிஞ்ச உடனே எஸ்கேப் ஆகிட்டாரு".. காட்டிக்கொடுத்த செல்போன்..2 நாட்டு மக்களையும் பதற வச்ச இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தாய்லாந்தில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியான உடனேயே கம்பாடியாவுக்கு தப்பிச்சென்றிருக்கிறார் இளைஞர் ஒருவர். இதனால் இரு நாடுகளுமே பதற்றத்தில் இருக்கின்றன.

Advertising
>
Advertising

Also Read | மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது.. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பரபரப்பான அறிவிப்பு..!

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

முதல் பாதிப்பு

தாய்லாந்தில் கடந்த திங்கட்கிழமை அன்று நைஜீரிய இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது அந்நாட்டில் பதிவான முதல் குரங்கு அம்மை தொற்றாகும். சுற்றுலா வந்த அவர் 2 பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்றிருக்கிறார். இதனால் 142 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தங்கியிருந்த ஹோட்டல், சென்ற இடங்கள் என அனைத்தையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே அந்த இளைஞர் திடீரென தனது செல்போனை ஆஃப் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பித்திருக்கிறார். அவரை தொடர்புகொள்ள முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே கம்போடியா எல்லையில் அவருடைய செல்போன் ஆன் செய்யப்பட்டிருக்கிறது.

காட்டிக்கொடுத்த செல்போன்

இந்நிலையில், கம்போடியா அரசுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், செல்போன் சிக்னல் மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் அனுப்பிய தகவல்களை கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கிய கம்போடிய அதிகாரிகள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த அந்த இளைஞரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், கம்போடியாவில் அவர் சென்ற இடங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த இளைஞருடன் தொடர்புகொண்ட அனைவரும் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள முன்வருமாறு கம்போடியா சுகாதாரத்துறை அமைச்சகம் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Also Read | கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த வைரஸ்.. 300 பன்றிகளுக்கு நேர போகும் துயரம்??.. அதிர்ச்சி பின்னணி

THAILAND, MONKEYPOX, PATIENT, CAMBODIA, THAILAND FIRST MONKEYPOX PATIENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்